அரசாங்கத்துக்கு ஒரு செய்தி..
அரசாங்கத்துக்கு ஒரு செய்தி..
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று இருந்தது. விசாரணை அறிக்கை கடந்த அரசாங்கத்தின் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அமைச்சர் அதன் பிரதி ஒன்றை கத்தோலிக்க சபைக்கு வழங்கினார். ஆனாலும் அந்த அறிக்கையை அமைச்சரோ
கத்தோலிக்க சபையோ நாட்டிற்கு வெளியிடவில்லை. மக்களுக்கு தெரியும்
ஒன்று மட்டுமே. அந்த அறிக்கையில் சில பகுதிகள் குறைவு என்பது மட்டுமே.
புதிய அரசாங்கம் மக்களுக்கு வாக்குறுதி ஒன்றை வழங்கியது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை துரிதப்படுத்துவது என்று. தற்போது ஒரு புதிய சுற்றில் விசாரணை தொடங்கியுள்ளது.
2025 ஏப்ரல் 21 ஆகும் போது தாக்குதல் இடம்பெற்று 6 வருடங்கள் நிறைவடைகிறன்றன. அதில் 5 வருடங்கள் கழிந்தது
கோத்தபாய, ரணில்- ராஜபக்ஷ ஆகியோரின் கீழாகும் . ஆனாலும் தற்போதைய அரசுக்கு எக்காரணம் கொண்டும் அவ்வாறு காலம் கடத்த முடியாது, விசாரணையை கிடப்பில் போட முடியாது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு
பாதுகாப்பு வழங்க முடியாது, சட்டத்தை வளைக்க முடியாது. அவர்களின் கைகளில் உயிர்த்த ஞாயிறு இரத்தம் இல்லை.
ஜனாதிபதி அனுரகுமார சகோதரர் உட்பட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு மக்கள் இவ்வாறான ஆணையை வழங்கியது அதுவரை ஆட்சியில் இருந்த சகல ஆட்சியாளரின் கைகளிலும் இரத்தக்கறை படிந்திருந்ததனால் ஆகும்.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் உட்பட அனைத்து குற்றச் செயல்கள், மனிதப் படுகொலைகள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் என்பன தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி, நீதியை நிலைநாட்டும் சவாலை வெற்றி கொள்ளும் அளவுக்கு ஏற்ப புதிய அரசியல் மாற்றம், அது பற்றிய நம்பிக்கை மற்றும்
புதிய அரசின் எதிர்காலம் குறித்து மக்கள் சிந்திப்பார்கள்.