About
WHO WE ARE
At FOD, we firmly believe in the inherent dignity and rights of every individual, and we are committed to seeking justice, truth, and accountability for those who have disappeared. Our organization was founded with the vision of creating a world where the rights of disappeared persons are protected, and their families receive the support and assistance they need in their time of uncertainty and distress.
As an organization, we work tirelessly to raise awareness about the issue of disappearances and to shed light on the often overlooked plight of affected families. Through advocacy, research, and collaboration, we aim to bring attention to this grave human rights concern and work towards preventing future disappearances.
OUR VISION
பின்வரும் அம்சங்களைக் கொண்ட ஒரு இலங்கை எமது தொலைநோக்காக அமைந்துள்ளது;
• மக்களின் எழுச்சி மிக்க செயற்பாடுகள் அத்துடன் நாடளாவிய ரீதியில் எழும் அழுத்தம் என்பவற்றின் காரணமாக இந்நாட்டின் மக்கள் அனைவரும் தமது உரிமைகளை சமமாக அனுபவிக்கும் நாடாக நிலைமாற்றம் அடையும். இந்த உரிமைகளில், வலிந்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் தொடர்புடைய வன்முறை என்பவற்றில் இருந்து சுதந்திரம் என்பன விசேட கவனம் வழங்கப்பட்டதாகக் காணப்படும், அத்துடன்
• அங்கு, கடந்த காலத்தில் இடம்பெற்ற அனைத்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பாக உண்மை வெளிக்கொணரப்படல் மற்றும் உரிய நட்டஈடுகள் வழங்கப்படுதல் உள்ளடங்கலான நீதி என்பவற்றின் அடிப்படையில் அமைந்ததாகக் காணப்படும், அத்துடன்
• அச்சுதந்திரம் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும் தொடர் செயன்முறையின் ஊடாக உருவாக்கப்பட்டதாகக் காணப்படும். இத்தொடர் செயன்முறை மக்களின் உரிமைகள் மதிக்கப்படல், பாதுகாக்கப்படல் அத்துடன் பூர்த்தி செய்யப்படல் என்ற கொள்கையினை பின்பற்றி முன்னெடுக்கப்படுவதாக அமையும்,அத்துடன் இதன் மூலமாக இக்குற்றங்கள் மீண்டும் இடம்பெறாது என்ற நிச்சய நிலை உருவாக்கப்படும்.
OUR MISSION
பின்வரும் விடயங்கள் எமது பணியாக அமைந்திருக்கும்;
• காணாமல் ஆக்கப்படல், மரணம், காயம் அல்லது ஏனைய இழப்புகளைச் சந்தித்த குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் தமது உரிமைகளைக் கோரவும் அவற்றைப் பிரயோகிக்கவும் அவசியமான தலைமைத்துவம் வழங்குதல் உள்ளடங்கலாக அவற்றை ஒன்று திரட்டல் மற்றும் வலுப்படுத்தல். இது அத்தரப்புகள் பின்வரும் விடயங்களை அடைந்து கொள்ள வழி வகுக்கும்;
o காணாமல் ஆக்கப்படல், அரசியல் படுகொலைகள் மற்றும் தொடர்புடைய ஏனைய மீறல்களால் பலியானோர் மற்றும் தப்பிப் பிழைத்தோருக்கு போதிய நட்டஈடுகள் வழங்கப்படல் உள்ளடங்கலாக கௌரவம் மற்றும் மரியாதையுடன் நீதி வழங்கப்பட்டு விடயம் முடிவுக்கு கொண்டுவருதல்.
o தமது கரிசனைகள் தொடர்பில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களில் உற்சாகமான பங்களிப்பை வழங்குதல், அதே போன்று, அத்தரப்புகளைப் பாதிக்கும் இத் தீர்மானங்களின் அமுல்படுத்தலின் முன்னேற்றத்தை கண்காணிக்க மற்றும் மீளாய்வு செய்ய அத்தரப்புகள் இயலுமானவையாக மாற்றமடையும்.
• நட்டஈடு உள்ளடங்கலாக குறை தீர்த்தலை அடைந்து கொள்வதற்காக அவ்வாறான மீறல்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கரிசனைகள் பற்றி பொது மக்கள் மற்றும் சர்வதேச சமூகம் என்பவற்றின் இடையே விழிப்புணர்வை அதிகரித்தல்.
• வலிந்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் தொடர்புடைய குற்றங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உரிமைகளுக்கான பரப்புரை மற்றும் பிரச்சாரத்தினை மேற்கொள்வதற்காக ஏனைய நிறுவனங்கள் மற்றும் முன்னெடுப்புகளுடன் ஒருங்கிணைப்பை மேற்கொள்ளல் மற்றும் இணைந்து பணியாற்றுதல்.
• இப்பிரச்சினையை நீதியான முறையில் முடிவுக்கு கொண்டு வர போராடும் குடும்பங்கள் மற்றும் அவற்றின் பரந்த சமூகங்களுக்கு பொருத்தமான அத்துடன் அப்போராட்டத்தை முன் கொண்டு செல்லும் வகையிலும் அமைந்த பொருளாதார மற்றும் சமூக நலன்புரி முன்னெடுப்பு ஆதரவுகளை வழங்குதல்.
• தமது பொதுவான இந்த நோக்கத்துக்காக ஏற்கனவே காணப்படும் இன, மத, மொழி, கலாச்சார, அரசியல் மற்றும் புவியியல் பிரிவினைகளைக் கொண்டுள்ள தரப்புகளுடன் பங்காண்மைகளை ஏற்படுத்தி வினைத்திறனுடன் பரப்புரை மற்றும் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் வகையில் பங்காண்மை உறுப்பினர்களின் தலைமத்துவ இயலுமை விருத்தி மற்றும் தேவையான திறன்களின் விருத்தியை இலகுபடுத்தல்.
• சமத்துவம்இ ஜனநாயக நெறிமுறைகள், தொழிலாளர் உரிமைகள், பால்நிலை நீதி அத்துடன் தொடர்புடைய அடிப்படைப் பிரச்சினைகளுடன் சமூக நீதி, மனித உரிமைகள், இன நல்லிணக்கம் போன்ற விடயங்களுக்காக பாடுபடும் ஒத்த சிந்தனை கொண்ட நிறுவனங்களுடன் ஒத்திசையும் தன்மை கொண்ட உரிமை அடிப்படையில் அமைந்த விடயங்களில் இணைந்து பணி புரிதல்.
Our Values
பின்வரும் விடயங்களில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்:
- இனம், மொழி, கலாச்சாரம், மதம், பிராந்தியம் அல்லது பாதிக்கப்பட்டவரின் தப்பிப் பிழைத்தவரின் கோட்பாடு எவையாக இருப்பினும் அல்லது குற்றமிழைத்தவரின் எதனுடன் இணைந்தவராயினும் அத்துடன் அக்குற்றமிழைத்தவரின் நோக்கம் என்னவாக இருப்பினும் அனைத்து காணாமல் ஆக்கப்படல் மற்றும் தொடர்புடைய குற்றங்கள் அனைத்தும் சம அளவில் பிழையானவை, சம அளவில் வெட்கப்பட வேண்டியவை அத்துடன் சம அளவில் எதிர்த்து போராடப்பட வேண்டியனவாகும்.
- அரசியல் நிலைப்பாடுகளுக்காக அத்துடன் விசேடமாக காணாமல் ஆக்கப்பட்ட நபர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் ஓரங்கட்டப்பட்ட அத்துடன் பாதிப்புறும் ஏதுநிலையில் உள்ளனவாக இருப்பினும் நீதி ஒரு போதும் விட்டுக்கொடுக்கப்படலாகாது.
- தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என அறிவதற்கான உரிமை வழங்கப்பட வேண்டிய நீதி கௌரவத்துடன் முடிவுக்கு கொண்டு வரல் அத்துடன் மீண்டும் ஏற்படாமல் முன் தடுத்தல் என்பவற்றுக்கான அடிப்படையாக அமைய வேண்டும். அத்துடன் இந்த உரிமையை நாம் நிதியியல் காரணங்களுக்காக ஏனைய குறுகிய கால அடைவுகளுக்காக ஒரு போதும் தியாகம் செய்ய மாட்டோம்.
- உண்மையைக் கண்டறிய, நீதி மற்றும் நட்டஈட்டை பெற்றுக் கொடுக்க இக்குடும்பங்களுடன் நாம் ஈடுபாடுகளை மேற்கொள்ளும் வேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் அனுபவங்கள் என்பவற்றை மரியாதை, பரிவு, புரிதல் அத்துடன் கூருணதிறன் என்பவற்றைக் கொண்ட அணுகுமுறை ஒன்றை நாம் பின்பற்றுவோம். அத்துடன் இவை பால்நிலை அடிப்படையில் அமைந்த கலாச்சார மற்றும் பொருளாதாரம் தொடர்பான கருத்திற் கொள்ளல்களில் இருந்து வேறுபிரிக்கப்பட முடியாதன என்பதை நாம் அங்கீகரிக்கின்றோம்.
- சமூக நீதி மற்றும் சமத்துவம்: நீதியானது தேர்ந்தெடுத்து வழங்கப்படாமல் மற்றும் அதிகாரத்துவக் கட்டமைப்பின் கீழ் காணப்படாத நிலையிலேயே அது அர்த்தம் மிக்கதாகவும் நிலைத்து நிற்பதாகவும் அமையும் என்ற நம்பிக்கையிலேயே எமது பணி உருவாக்கப்பட்டுள்ளது அத்துடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சமூக, அரசியல், பொருளாதார மற்றும் பால்நிலை அம்சங்கள் உள்ளடங்கிய மனித அனுபவத்தின் அனைத்து விடயங்களும் நீதிக்குள் உள்வாங்கப்பட வேண்டும்.
- மனித உரிமைகளின் மீறப்பட முடியாத நிலை: எமது பணியில் நாம் காணாமல் ஆக்கப்பட்டோர் அத்துடன் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் அதே வேளை, அனைவரினதும் அடிப்படை மனித உரிமைகளை மதிப்பதில், நிலை நிறுத்துவதில் மற்றும் ஊக்குவிப்பதில் அர்ப்பணிப்பு மிக்கவர்களாக உள்ளோம்.
- உரிமைகள் அடிப்படையில் அமைந்த அணுகுமுறை: மனித உரிமைகள் அடிப்படையில் அமைந்த அணுகுமுறையினை நாம் ஏற்றுக் கொண்டு அதனை பின்பற்றுகின்றோம். இந்த அணுகுமுறை பாகுபாடு காண்பிக்காமை, வலுப்படுத்தல், பங்கேற்பு மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய விழுமியங்களை உள்ளடக்கியுள்ளதுடன் சர்வதேச மனித உரிமைச் சாசணங்கள் மற்றும் கொள்கைகளுடன் இணைப்புகளைக் கொண்டதாகக் காணப்படுகின்றது.
- பரப்புரைஇ விழிப்புணர்வு மற்றும் பங்காண்மை என்பவற்றை மையமாகக் கொண்டு செயற்படல்: காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் என்பன எமது பிரதான கவனக்குவிவு மிக்க விடயங்களாக அமைந்திருந்த போதும்இ மனித உரிமைகளை பாதுகாக்கும் அத்துடன் அனைவரினதும் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்த கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பரப்புரையினை நாம் மேற்கொள்வதுடன் அவற்றுக்கான உள்வாங்கும் பொது மக்கள் ஆதரவையும் ஒன்று திரட்டுகின்றோம்.
இந்த நம்பிக்கைகளுக்கு ஒத்திசைவானதாக எமது பின்வரும் அடிப்படை விழுமியங்கள் அமைகின்றன;
எங்கள் மைல்கற்கள்
1991 - 2000
2011 - 2020
2021 - 2030