உடு பிஹில்ல கிராமத்தை சுற்றிவலைத்து இளைஞர்களை அழைத்து வந்த நாளில் என்னை கம்பளத்தில் சுற்றி, கட்டி
உடு பிஹில்ல கிராமத்தை சுற்றிவலைத்து இளைஞர்களை அழைத்து வந்த நாளில் என்னை கம்பளத்தில் சுற்றி, கட்டி, வெள்ளை வேனில் ஏற்றிச் செல்லும் போது நான் நினைத்தேன் நான் போவது எனது இறுதிப் பயணம் என்று. மாத்தளை வாடிவீட்டில் இருந்த சித்திரவதை முகாமுக்கு எடுத்துச் சென்று என்னை அவிழ்துவிட்டனர். அந்த வேளையில் எமது ஊர் அமரசேன அங்கு இருந்ததைக் கண்டேன். அமரசேன இருந்தது முழுமையாக நிர்வாணமான நிலையிலாகும். அவரது ஆண் உறுப்புக்கு இரும்பு வளையம் அணிவித்து, இரண்டு வயர்கள் பொறுத்தி அடிக்கடி மின்சாரம் பாய்த்தனர். சித்திரவதை செய்த ஒருவன் அமரசேனவின் கையில் ஒரு வாளைக் கொடுத்தான், எனது கையில் ஒரு கத்தியை கொடுத்து, "நீ இரண்டு பேரும் வெட்டிக்கொள்" என்றனர். நாம் இருவரும் தாக்குதலை தடுத்துக்கொண்டு சிறிது நேரம் இருந்தோம். லால், ஜுட், ஹேரத் எனும் இராணுவ பிரிவின் மூவர் அங்கு இருந்தனர். லால் எனது முன்னிலையில் அமரசேனவின் கழுத்தை வெட்டினான். "நீ ஜே.வி.பி இல்லை என்றால் இவனின் இரத்தத்தைக் குடித்துக் காட்டு" என்றான்".
சிசிர தடிகார,
சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியம்.