காணாமல் ஆக்கப்பட்டோரின் 34 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று ( அக்டோபர் 27) ரத்தொலுகமவில் காணாமல் போனோர் நினைவு தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
மாற்றத்தை ஏற்றுக்கொள்வோம் - போராட்டத்தை கைவிடாமல் இருப்போம்..!
ஜனாதிபதி அநுர சகோதரர்,
காணாமல் ஆக்கப்பட்டோரின் 34 வது வருடாந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று ( அக்டோபர் 27) ரத்தொலுகமவில் காணாமல் போனோர் நினைவு தூபிக்கு முன்பாக இடம்பெற்றது.
காணாமல் போன குடும்பங்களின் தாய்மார்களாக நாம் அநுர சகோதரருக்கு அழைப்பிதலை வழங்க கட்சி காரியாலயத்திற்கு சென்றோம், அங்கு டில்வின் சில்வாவை சந்தித்தோம். அழைப்பிதலை பாரமெடுத்தார். ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்றோம், அதிகாரி ஒருவர் அழைப்பிதலை பாரமெடுத்தார்.
நாம் 1990 தொடக்கம் இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடாத்தி வருகிறோம். அந்த எந்தவொரு வருடத்திலும் எந்தவொரு ஜனாதிபதிக்கு நாம் அழைப்பு விடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் அனைவரினதும் கைகளில் எமது அன்பானவர்களின் இரத்தம் தோய்ந்துள்ளன.
நாம் முதல் முறையாகத்தான் ஜனாதிபதி ஒருவரை எம்மவர்களின் நினைவேந்தலுக்கு அழைத்தோம். அநுர சகோதரரே,அது உங்களை ஆகும். நீங்கள் தற்போது எமது ஜனாதிபதி என்பதனாலாகும்.
நேற்று வருகை தந்த எமது தாய்மார்கள் சுமார் 1000 பேருக்கு ஒன்றோ அவரின் கணவன், அல்லது மகன், மகள் காணாமல் போயுள்ளார் இல்லாவிட்டால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
உங்களுக்கு தெரியும் இதை பிரேமதாச அரசாங்கமே செய்தது. எமது கூடுதலானவர்கள் மக்கள் விடுதலை முன்னணிக்காகவே உயிரைக் கொடுத்தனர்.
இந்த அநீதியான முறைமையை மாற்றி நீதியான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடனாகும்.
கடந்த 34 ஆண்டுகளாக எங்களை யாரும் கவனிக்கவில்லை. குறைந்த பட்சம் ஜே.வி.பி யும் எங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனால் நாங்கள் ஒருபோதும் அதற்காக கட்சி மீது கோபப்பட்டதில்லை.
நாங்கள் நினைத்தோம், நாங்கள் மிகவும் எதிர்பார்த்தோம்
அனுரா சகோதரரே,நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்களை, உங்கள் அந்த சகோதர சகோதரிகளை நினைவுகூர நீங்கள் எங்களுடன் வருவீர்கள் என்று. வந்து எங்கள் கதையை கேட்பீர்கள் என்று. எமது மேடையில் ஏறி எம்மவர்கள் தொடர்பாக பேசுவதை கேட்க பார்க்க நாம் ஆசையுடன் இருந்தோம். ஆனால் சகோதரரே நீங்கள் வரவில்லை.
எங்களுக்கு தெரியும் சகோதரரே, ஜனாதிபதி என்ற முறையில் உங்களுக்கு நிறைய வேலை உண்டு. உங்களுக்கு வேலைப் பளு அதிகம். அதனால் கம்பஹா மாவட்ட பிரதிநிதி ஒருவரை அனுப்பி இருந்தீர்கள். உங்களுக்காக அந்த சகோதரரை வரவேற்றோம் . ஆனாலும் எமது எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. எவ்வளவு வேலை இருந்தாலும், இந்த வேலையில் எங்களது, இழந்த அந்த உங்கள் சகோதர சகோதரிகளுக்கு நீதி நியாயத்தை நிலைநாட்ட முன்னுரிமை வழங்குவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஏனைய அரசுகள் போல், ஆட்சியாளர்கள் போல் எம்மை கவனிக்காமல் இருக்க வேண்டாம்.
நாம் இந்த பணியை நீதி கிடைக்கும் வரை தொடர்ந்தும் எடுத்துச் செய்வோம். உங்கள் காலத்தில் விரைவில் எங்களுக்கு நீதி கிடைக்கும் என்று எதிர்பார்கிறோம்.
இப்படிக்கு,
காணாமல் போன
குடும்பங்களின் தாய்மார்கள்.