இலங்கை காவல் தலைமையகத்திற்கு முன்பாக ஒரு போராட்டம்.
பொலிஸ் தலைமையகம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக சவ்கஞ்சி விநியோகித்ததற்கு, கடந்த 12 இரவு சாம்பூர் பொலிஸார்
வீடுகளுக்குள் புகுந்து மூன்று பெண்களை சித்திரவதை செய்து மற்றொரு நபருடன் கைது செய்தமைக்கு எதிராக குறித்த பொலிஸ் அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யுமாறு பலவந்தப்படுத்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தின் தலைமையில் ஏனைய அமைப்புக்களும் செயற்பாட்டாளர்களும் இதில் பங்குபற்றினர். போராட்டத்தின் முடிவில் அவர்கள் எதிர்ப்பு மகஜர் ஒன்றை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைத்தனர்.
வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலைக்கு உள்ளானவர்களை நினைவுகூரும் உரிமைக்காக மற்றும் இனவாதத்திற்கு எதிராக பெருந் தொகையானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இனைந்திருந்தனர்.