கைது செய்யப்பட்ட இளைஞன் தாக்கப்பட்டுள்ளார், இளைஞனின் மரணம் தொடர்பாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு..
கைது செய்யப்பட்ட இளைஞன் தாக்கப்பட்டுள்ளார், இளைஞனின் மரணம் தொடர்பாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு..
" எனது கணவரை மோட்டார் விபத்து தொடர்பாக கைது செய்தனர். சில மணி நேரம் தடுத்து வைத்து, பின்னர் வீட்டுக்கு அனுப்பினர். கணவர் சொன்னார் பொலிஸார் தடிகளால் நன்றாக அடித்தார்கள், எனது நெஞ்சு வலிக்கிறது எனக் கூறினார். நாம் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றோம்"
இந்த சம்பவம் பதிவாகுவது வாத்துவையில். சமித தில்ஷான், வயது 24, அவர் ஒரு பிள்ளையின் தந்தை. 2025.02.11 வாத்துவ பொலிஸ் மூலம் அவரை கைது செய்தது வாகண விபத்து சம்பவித்தது தொடர்பாக சந்தேகத்தில் ஆகும். வாத்துவ பொலிஸ் நிலையத்தில் சில மணி நேரம் தடுத்து வைத்திருந்த அவரை பின்னர் விடுவித்து இருந்தனர்.
வீட்டுக்கு வந்த தில்ஷான் இரத்த வாந்தி எடுத்துள்ளார். குடும்பத்தாரிடம் அவர் கூறியுள்ளார் வாத்துவ பொலிஸில் தடுத்து வைத்திருந்த போது பொலிஸ் அதிகாரி ஒருவர் தடியால் அவரை கடுமையாக தாக்கியதாக. அன்றய தினம் இரவு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மரணம் அடைந்துள்ளார்.
வாதுவ பொலிஸார் தெரிவிப்பதாவது
பொலிஸ் பிணை வழங்கப்பட்டு சிகிச்சை அளிப்பதற்காக தில்ஷானை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைத்ததாக.
“வாத்துவ பொலிஸார் எனது கணவரை அடித்துக் கொன்றனர். நானும் எனது அப்பாவி குழந்தையும் தனிமைப்பட்டோம். எமக்கு நியாயத்தை பெற்றுத் தாருங்கள்".
ரோஷினீ லக்மாலீ,
மரணமடைந்த தில்ஷானின் மனைவி