National February 16, 2025

ரிச்சர்ட் டி சொய்சா நினைவேந்தல் : உரையாடல் கருத்தரங்கு

Share

ரிச்சர்ட் டி சொய்சா நினைவேந்தல் :
உரையாடல் கருத்தரங்கு
1990 பெப்ரவரி 18 கடத்திச் சென்று, சித்திரவதைக்கு உள்ளாக்கி கொலை செய்யப்பட்ட ரிச்சர்ட் டி சொய்சா தொடர்பாக 35 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒரு முறை சமூகத்தில் பேச்சுக் உள்ளாகியுள்ளது. இந்த உரையாடல் நடப்பது அசோக்க ஹதகமகேயின் 'ராணி' திரைப்படத்தினால் ஆகும். ரிச்சர்ட்டின் படுகொலை மற்றும் அவரது தாயார் மனோராணி சரவனமுத்துவின் பாத்திரமும் சினிமா திரைக்கு கொண்டுவந்ததன் மூலம் தென்னிலங்கையில் சடலங்கள் கிடைக்காத, ஒரு கல்லறை கூட இல்லாத காணாமல் போன சுமார் 60000 அன்புக்குரிவர்களின் அன்னையர் மற்றும் மனைவியர் தொடர்பாக சமூக அதிர்ச்சி மீண்டும் உணரத் தொடங்கியுள்ளது.
வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது.
அத்தோடு மனோராணி தலைமைத்துவம் வழங்கிய 1991ல் உருவாக்கப்பட்ட "அன்னையர் முன்னணி" 1994 ஆட்சி மாற்றத்திற்கு, இலங்கையில் முதல் தடவையாக கணவர் படுகொலை செய்யப்பட்ட ஒரு மனைவியை, ஒரு தாயை நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நியமிப்பதற்கு பிள்ளைகளை இழந்த தாய்மார், கணவர்களை இழந்த மனைவியர் சென்ற பாதயாத்திரை காரணமாக இருந்தாலும் ஏமாற்று அரசியலுக்குள் தெற்கில் காணாமல் போன மற்றும் படுகொலை செய்யப்பட்ட அனைவருக்கும் எப்படியென்றாலும், 94 ல் முன்னணி வகித்த மனோராணிக்காவது தனது மகனின் படுகொலைக்கு நீதி நிலைநாட்டப் படவில்லை.
வரலாற்றுச் சான்று அப்படி என்றாலும், வரலாறு இன்னும் முடிவை அடையவில்லை.
காணாமல் ஆக்கப்பட்டது மற்றும் படு கொலைகளுக்கு எதிரான அந்த போராட்டம் 35 வருடங்களாக கைவிடப்படாமல் முன்நோக்கி நகர்கின்றது.
ஹதகமகே 'ராணி' ஊடாக ரிச்சர்ட்டின் காலடி ஓசையுடன் குற்ற அரசின் எதிரொலி புதிய சுற்றில் வாசிப்பதிலும் ஈடுபாட்டிலும் ஆரம்பிப்பதன் மூலம் தற்போதைய சமூகம் எதிர்காலத்தில் நீதியை பெற்றுக் கொள்வதற்கான। முன்னோக்கிய திசை பொருத்தமானதாகும்.
படுகொலை செய்யப்பட்ட ரிச்சர்ட் டி சொய்சா நினைவேந்தல் : உரையாடல் கருத்தரங்கு
காலம்: 2025 பெப்ரவரி 18
நேரம்: மாலை 3 மணி
இடம்: கொழும்பு தேசிய நூலக கேட்போர் கூடம்
கருத்துரை:
நந்தன வீரரத்ன
பிரதீப் ஜெகநாதன்
விதர்ஷன கன்னங்கர
அசங்க அபேரத்ன
அணுகல் மற்றும் இயக்குதல்: மரீன் நிலாஷனி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *