May 19, 2025

“1996 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு – திரும்பி வந்த கைதிகளின் பட்டியல்”, அதில் 384 நபர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்ட,

Share

"1996 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு - திரும்பி வந்த கைதிகளின் பட்டியல்", அதில் 384 நபர்கள் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த காலகட்டத்தில் கடத்தப்பட்ட, சித்திரவதைக்கு உள்ளான ஆனாலும் பெயர், ஊர், முறைப்பாடு இல்லாத பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கில் இருப்பது எங்களுக்கு தெரியவந்தன.
அதன் அடிப்படையில் தான் கொழும்புக்கு வரவழைத்ததன் பின்னர் சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியம் உருவாக்கப்பட்டு, அதன் தேசிய குழு ஊடாக மாவட்ட மட்டத்தில் அங்கத்தவர்களை ஒன்று திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்தோம். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக கூடுதலானவர்கள் சம்பந்தமாக தகவல் மற்றும் தொடர்புகளுக்கான வழிகளை கட்டியெழுப்ப எமக்கு முடிந்தன.
2025.05.18 பதுளை செனரத் பரனவிதான மண்டபத்தில் ஒன்றுகூடிய அவர்கள் 1987-93 காலப்பகுதியில் முகம் கொடுத்த அந்த வதை வலி, மரணத்தின் அனுபவத்துடன் அப்போது பதுளை மாவட்டத்தில் செயல்பட்ட சித்திரவதை முகாம் இயங்கிய இடம் மற்றும் கண்களால் கண்ட சாட்சிகளுடன் பெரும்பாலான தகவல்கள் அறிக்கை இடப்பட்டன.
அதன்படி, மக்கள் விடுதலை முன்னணி செயளாலர் ரில்வின் சில்வா சகோதரர் உடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடாத்தவும், முன்மொழிவுகளை முன்வைத்து 87-93 காலத்தில் அப்போதைய அரசு மற்றும் அவர்களின் கொலை கும்பல் மூலம் கடத்தப்பட்ட, சித்திரவதைக்கு உள்ளான, படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட பாதிக்கப்பட்ட மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு நீதி, நியாயம் மற்றும் இழப்பீடு தொடர்பாக அரசு செயல்முறைக்கு சம்பந்தமான ஆரம்ப நடவடிக்கைகள் தொடர்பாக தேவையான பங்களிப்பை பெற்றுக்கொடுக்க திட்டமிட்டோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *