மாணவ வீரர்களை தேடிச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதிய பரம்பரை..
மாணவ வீரர்களை தேடிச் சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புதிய பரம்பரை..
பேரதனை பல்கலைக் கழக சுற்றுலாவில் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் ரோஹன வீரசூரிய நினைவுத் தூபிக்குச் சென்று மாணவ வீரர்களை நினைவு கூர்ந்தனர். மாணவ போராட்டங்களுக்கு தொடுத்த அரச அடக்குமுறையினால் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதற்கு உள்ளான மாணவ வீரர்கள் தொடர்பாக தற்போதைய மாணவ பரம்பரையுடன் கருத்துப் பரிமாறலுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களில் பெற்றார்களின் அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வி்ஷேடமாக 87-90 காலப்பகுதியில் காணாமல் போன எமது குடும்பத்தின் அன்பானவர்கள் மற்றும் ஜே.வி.பி. இரண்டாவது ஆயுத போராட்டத்தில் இருந்த மாணவ தலைவர்கள், செயற்பாட்டாளர்களின் நெருக்கம் தொடர்பாகவும் ஞாபகத்தை நினைவு படுத்திக்கொண்டோம்.
முதலாவது மாணவர் போராட்டம் தோன்றியது பேராதனை பல்கலைக்கழகத்திலாகும். அது வாகன தரிப்பிடத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் உணவு வேளைக்காக வழங்கப்படும் முட்டையின் பாதியை ஒரு முட்டையாக அதிகரிப்பதற்கான கோரிக்கையை வென்றெடுப்பதற்காகும்.
அப்போது அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
1975ல் அனைத்துப் பல்கலைக்கழக ஒன்றியம் உருவாக்கப்படுவது இலவசக் கல்வியை பாதுகாத்துகொள்ள, மாணவர் நலன்களை பெற்றுக்கொள்ள மற்றும் மாணவ அடக்கு முறைக்கு எதிராக மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வலுவாக முகம் கொடுப்பதற்காகும். அப்போது அரச அடக்குமுறை பல்கலைக்கழகத்துக்குள் புகுந்து இருந்தது.
1976ல் பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தில் பொலிஸ் நிலையம் ஒன்றை அமைக்கும் சிறிமாவின் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக
பாரிய மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
அந்தப் போராட்டத்தை கலைப்பதற்காக பல்கலைக்கழக வளாகத்திக்குள் அழைக்கப்பட்டிருந்த பொலிஸாருக்கு எதிராக மாணவர்கள் உயிர் தியாகத்துடன் முன்வந்து எதிர்ப்பை காட்டும் போது பொலிஸார் வைத்த துப்பாக்கிச் சூட்டுக்கு1976.10.12 ம் திகதி ரோஹன வீரசூரிய சகோதரர் உயிரிழந்தார்.
போராட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர் இயக்கம் ரோ்ஹன வீரசூரிய படுகொலை செய்யப்பட்ட இடத்தில் அவரது நினைவாக ஒரு நினைவுத் தூபியை அமைத்தது.
இன்றும் பேராதனை பல்கலைக் கழகத்திக்குள் பொலிஸ் நிலையம் ஒன்றை காணமலிருப்பது
உயிர்த் தியாகத்துடன் முன்னெடுக்கப்பட்ட மாணவர் போராட்டத்தின் வரலாற்று வெற்றியின் விளைவாக ஆகும்.
மாணவர் இயக்க வரலாற்றில் சுமார் 627 மாணவ செயற்பாட்டாளர்கள் முன்னைய அரசாங்கங்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரது சடலங்கள் கூட கண்டுபிடிக்கப்படவில்லை. அனைத்துபல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளரான மொஹமட் நிஷ்மி 1990ல் நுகேகொடையில் வைத்து பலவந்தமாகா காணாமல் ஆக்கப்பட்டார்.