இனவாதத்திற்கு மீண்டும் இடமளியாமல் இருப்போம்..!
இனவாதத்திற்கு மீண்டும் இடமளியாமல் இருப்போம்..!
சவ் கஞ்சி சிரட்டை உடன் மனித நேயத்தை பகிர்ந்து கொள்வோம்..!
"யுத்தத்தின் இறுதிக் கட்டம்", சகல பேதங்களையும் பின்தள்ளி மனதுக்கு இணங்க சிந்தித்தால் அது மனித நேயத்தின் இறுதி தருணமாக இருக்கும்.
முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இருந்து ~LTTE போராளிகள், தறைவழியாக இராணுவ படை, இவை இரண்டிற்கும் மத்தியில் சிக்குண்ட ஆயிரக்கணக்கான நிராயுதபானியான தமிழ் சிவில் பிரஜைகள்.
இரு பக்கமும் வெடி குண்டுகளால் துழைக்கப்பட்ட அந்த அப்பாவி மனித உயிர்கள்.
இறுதி காலத்தில் உண்பதற்கு ஒன்றுமில்லாமல், குழந்தைகள் பசியில், TV ல் கேட்கும் வெடி சத்தத்தை விட யுத்த பூமியில் கேட்கும் சத்தத்திற்கு இடையே பாரிய வித்தியாசம் உள்ளது தோழரே. குழந்தைகள் கூக்குரல் இடும்போது கடைசி அரிசி மூடையை வேகவைத்து உப்புடன் அவர்கள் சவ் கஞ்சி குடித்தது கண்ணீருடனாகும். ஒவ்வொருவராக இழக்கும் போது இறைவன் கூட அவர்களை பார்க்கவில்லை.
ஜே. ஆர்., ரணில், பிரேமதாஸ, சந்திரிக்கா, மஹிந்த, கோதா. அதிகாரத்தை பாதுகாக்க மனிதப் படுகொலைகளை செய்ய, காணாமல் ஆக்கப்பட மாத்திரம் அவர்களுக்கு இனவாதம் தொடர்பு படவில்லை. 87-89 காலத்தில் தெற்கில் 60000 கும் அப்பால் காணாமல் ஆக்கப்பட்ட போராட்டக்காரர்கள் கிராம சிங்கள இளைஞர் யுவதிகள் என்பதை மறக்காதீர்கள்!
வடக்கிலும், தெற்கிலும் கொலை செய்தது, காணாமல் ஆக்கப்பட்டது எமது மக்களே.
இன்று வடக்கில், தெற்கில் அழுது புலம்பும், ஒப்பாரி வைக்கும் தாய்மார்களின் கண்ணீர் கண்ணீர்தான். அந்த கண்ணீர்களுக்கு என்ன பிரிவினை, மாற்றம்.
"எல்லா இடங்களிலும் மரணித்ததும் பிள்ளைகளே அம்மா- எல்லா இடங்களிலும் கொன்றதும் பிள்ளைகளே அம்மா"
அப்படி எழுதிய சந்திரேயும் இறுதியில் காணாமல் ஆக்கப்பட்ட நாட்டில் தான் நாம் இன்னும் வாழ்கிறோம் நண்பா.
மனிதநேயம், சகோதரத்துவம் காணாமல் ஆக்கப்படாமல் இருப்போம்..!
மரணித்த உறவினர்களை நினைவு கூறுவது யாவரினதும் உரிமையே..!
அது மனித ஒழுக்க விழுமியங்களின் ஆரம்ப முதல் மனிதர்களால் மனிதர்களுக்காக கடைபிடிக்கப்பட்ட ஒழுக்க விழுமியங்களே, மனிதநேயத்தின் பெறுமதியான அங்கம் என்பதை புரிந்து கொள்வோம்..!