மாகாண சபை பற்றிய புதிய வேலை..
மாகாண சபை பற்றிய புதிய வேலை..
காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தின் கல்வி திட்டப் பிரிவின் மற்றொரு செயல்திட்டம் கடந்த நாளில் மாத்தறையில் நடைபெற்றது.
" இது இரு நாள் வதிவிட கல்வி செயல்திட்டம். சில காலங்களுக்கு முன் எமது தேவைக்கேற்ப ஊடகக் கற்கைகள் மற்றும் பயிற்சிகள், இலங்கையின் அடக்குமுறை கட்டளைச் சட்டங்கள், மனித மற்றும் அடிப்படை உரிமைகள், உள்நாட்டு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பொறிமுறை, ஐக்கிய நாடுகளின் வழிமுறைகள் பற்றிய கல்வி நிகழ்ச்சித்திட்டங்களை ஆரம்பித்தோம். அவை பல கட்டங்களின் கீழ் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.
இதற்கிடையில் மற்றொரு சிக்கலான அம்சம் தொடர்பாக நாம் புதிய செயல் திட்டத்தைத் தொடங்கினோம்.
"(ஸ்ரீ) லங்காவின் தேசிய பிரச்சினை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல்"
இம்முறை இடம்பெற்றது அதன் மூன்றாம் கட்டமாகும். அது மாகாண சபை பற்றியது. இந்திய இலங்கை ஒப்பந்தம், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம், இந்திய விரிவாக்கவாதம் மற்றும் 1987 தொடர்பான அரசியல் மோதல் வரலாறு பற்றி நாங்கள் நிறைய படித்தோம். மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காணாமல் போன சமூகம் என்ற வகையில் வலுவான நிலையை இதன் ஊடாக கட்டியெழுப்புவோம்"
I.D.R. மல்லிகா
காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம்