சவேந்திரா, கமல், பிள்ளையான் மீது பொருளாதார தடையா?
மனிதநேயத்திற்கு எதிரான கடுமையான குற்றச் செயல்களுக்காக குற்றம் சாட்டப்பட்டுள்ள
பாதுகாப்பு படைகளின் பிரதானியும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன மற்றும் LTTE அமைப்பின் கிழக்குத் தலைவரான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் (TMVP) கட்சியின் தலைவர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட்டு 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக பொருளாதார தடை விதிக்குமாறு இலங்கையில் சமாதானம் மற்றும் நீதிக்கான இயக்கம் (Sri Lanka Campaign for Peace & Justice) ஐக்கிய இராஜியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதற்கு காரணம் யுத்தம் முடிவடைந்து ஒன்றரை தசாப்தங்கள் கடந்த பின்னரும், கடந்த கால பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்காக தண்டிக்கப்படாமல் தண்டனையிலிருந்து விலக்களிப்பை பெற்று தொடர்ந்தும் அவர்கள்
உயர்மட்ட அதிகாரிகளாக அனுபவித்து வருகின்றனர்.
இதற்கு முன்னதாக ஐக்கிய அமெரிக்கா
மகிந்த, கோத்தபாய மற்றும் சவேந்திர சில்வா உட்பட பலர் மீது குளோபல் மேக்னிட்ஸ்கி சட்டத்தின் கீழ் பொருளாதார தடைகளை விதித்திருந்தது