National March 6, 2025

இறுதி அறிக்கை, ஆறு வாரங்களுக்குள் வெளியிடப்படும்

Share

இறுதி அறிக்கை, ஆறு வாரங்களுக்குள் வெளியிடப்படும்"
எதிர்வரும் மார்ச் 27 ஆம் திகதி, முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தீர்மானம்மிக்க வழக்கு விசாரணை ஆரம்பிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. அது 2023 ஜுன் 29 கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்காகும்.
இந்த மனிதன் புதைகுழியின் அகழ்வாராச்சி பனி 2024 ஜூலை 15 முடிவடையும் போது 52 மனித எழும்புப் பாகங்கள் வெளியே எடுக்கப்பட்டிருந்தன. அதற்கு மேலதிகமாக ஆடைகள், ஆடைகளில் குறிப்பிடப்பட்டிருந்த இலக்கம், அவர்கள் அணிந்திருந்த இலக்கத் தகடு மற்றும் டிஜிடல் அறிவிப்பு பலகை ஒன்றும் கிடைத்தன.
இந்த சாதனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியும் என்று அகழ்வாராச்சிக்கு பொறுப்பான உத்தியோகத்தர் தெரிவித்தார்.
அகழ்வுப் பணிகளை மேற்கொண்டது முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவாவின் தலைமையில் ஆகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர் தற்போது அதற்காக சத்தியப் பிரகடனம் மற்றும் டி.என்.ஏ. மாதிரிகள் உட்பட உயிரியல் தரவுகளை வழங்கியுள்ளனர்.
எதிர்கால விசாரணை நடவடிக்கைகள் அவ்வாறு வெற்றியளித்தால் இதுவரை இலங்கையில் தோண்டப்பட்ட மனிதப் புதை குழிகள் 23 ல் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியக்கூடிய முதலாவது மனிதப் புதை குழி இதுவாக இருக்கும்.
"கொக்குதொடுவாய் மனித புதைகுழி பற்றிய நான் இரண்டு அறிக்கைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தேன். முதலாவது அறிக்கை கொக்குத்தொடுவாய் மனித புதை குழியின் அகழ்வில் வெளியே எடுத்த எழும்புக் கூடுகள் உடன் இருந்த ஆடைகள் தொடர்பானதாகும். இரண்டாவது அறிக்கை கொக்குத்தொடுவாய் மனித புதை குழியின் அகழ்வில் மீட்கப்பட்ட எலும்புகள் யாருடையது என அடையாளம் காண உதவும் ஏனைய பொருட்களைப் பற்றியது. இறுதி அறிக்கை வெளியிடும் நேரத்தில் இறந்தவர் இறந்தது என்ன காரணத்தினால்? அவரின் வயது, உயரம் போன்ற விபரம் உள்ளடக்கிய சம்பூர்ணமான அறிக்கை ஆறு வாரங்களில் வெளியிடப்படும். அப்போது
இலக்கத் தகடு உள்ளவரின் உறவினர்களுக்கு மரணித்த நபரை இலகுவாக அடையாளம் காணமுடியும்"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *