இராஜினாமா செய்யாவிட்டால், குற்றப் பிரேரணை உறுதி
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன தொடர்பில் கடந்த வாரம் ஊடகங்களில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அது அவருக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவர தேமச அரசு தயாராகி வருவதாக கூறப்பட்டது.
சர்ச்சைக்குரிய குற்றச் செயல்கள் மற்றும் மோசடி தொடர்பான 11 வழக்குகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறைகளுக்கு பணிப்புரை விடுத்தார்.எனினும் அதன் தாமதம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் சட்டமா அதிபருக்கும் இடையில் மீண்டும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அந்தக் கலந்துரையாடலின் பின்னர்
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவரை பதவி நீக்குவதாக வதந்தி பரவியது.
நேற்று தினம் ஜனாதிபதி சிரச TV சடன நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் ஒருவர் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் குற்றப் பிரேரணை தயார் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். அதன்படி அடுத்த சில நாட்களுக்குள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவி விலகாவிட்டால் அந்தக் குற்றப் பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவது உறுதி என்றார்