National January 28, 2025

துறைமுக மாஸ் கல்லறை

Share

#துறைமுக மனிதப் புதைகுழி- அகழ்வாராய்ச்சி மீண்டும் ஆரம்பம்..


இங்குருகடை சந்தி முதல் கொழும்பு துறைமுகம் வரை நிர்மாணிக்கப்படும் அதிவேக வீதியின் அகழ்வின் போது 2024.08.13 எதேச்சையாக வெளிவந்த மனித எழும்புத் துண்டுகளை மீட்கும் அகழ்வுப் பணிகள் 2024.09.05 கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிபதி பண்டார இலங்கசிங்கவின் உத்தரவுக்கு இணங்க மற்றும் மேற்பார்வையின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் 2024.09.05 தொடக்கம் 09.14 வரை இடம்பெற்றது. அங்கு 4 மனித எழும்பு பாகங்கள், பற்கள் மற்றும் மண்டை ஓடு உட்பட எச்சங்கள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி, அகழ்வாராய்ச்சிக்கு பொறுப்பாக செயல்படும் தொல்பொருளியல் பேராசிரியர் மற்றும் அகழ்வு தொடர்பான நிபுணர் ராஜ் சோமதேவ ஆகியோரின் தலைமையில் மீட்கப்பட்டன.
அகழ்வுப் பணிகளின் முதற்கட்டம் இவ்வாறு முடிவடைந்ததுடன் அதன் இரண்டாம் கட்டம் 2025.01.27 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இரண்டாவது நாளில், அகழ்வாராய்ச்சிக் குழியின் அருகில் மேலும் இரண்டு குழிகள் பேகோ இயந்திரங்களின் உதவியுடன் தோண்டப்படுகின்றன.
இது எந்தக் காலத்திற்கு உரிய மனிதப் புதைகுழி?, அது குற்றச் செயலுக்கு உட்பட்ட சிலருடையதா? மற்றும் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதை அடையாளம் காணப்பட வேண்டும்.
காணாமல் போனரின் குடும்ப ஒன்றியம் மூலம் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதுடன்,
அகழ்வாராய்ச்சி குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிந்துகொள்வதற்காக ஊடகப் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக ஆரம்பத்தில் இருந்து நாங்கள் வெளியிட்ட தகவல்களை கீழே உள்ள இணைப்புகள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *