ராஜ் குமாரி படுகொலை வழக்கிற்கு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜ் குமாரி படுகொலை வழக்கிற்கு நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆர். ராஜ் குமாரி, மலையக பெண். அவள் வேலை செய்தது ராஜகிரியவில் பணக்கார பெண்ணின் வீட்டில். இந்த சம்பவம் இடம்பெற்றது 2023ம் ஆண்டில். வீட்டு உரிமையாளரான பெண் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார்.
அந்த முறைப்பாட்டிற்கு இணங்க ராஜ் குமாரியை வெலிகட பொலிஸார் கைது செய்து அவளை சித்திரவதை செய்து, தாக்கி பொலிஸ் நிலையம் உள்ளே படுகொலை செய்திருந்தனர்.
ராஜ் குமாரி படுகொலை தொடர்பாக வெலிகட பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மேலும் மூன்று அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. அந்த வழக்கு 2025.05.15 ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சில மணி நேரங்களுக்கு முன் அந்த வழக்கின் விடயங்களை ஆராய்ந்த மேல் நீதிமன்ற நீதியரசர் ஆர்.எஸ்.எஸ். சபுவித இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக முன் விளக்க மகாநாட்டிக்காக அழைப்பு விடுக்க கட்டளை பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் 2025.07.21 ம் திகதி ராஜ் குமாரி படுகொலை வழக்கின் முன் விளக்க மகாநாடு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அழைக்கப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.
சித்திரவதைையை எதிர்ப்போம்..!
ராஜ் குமாரி சகோதரிக்கு நீதியை நிலைநாட்டு..!
ராஜ் குமாரியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கு..!
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கு..!
பொலிஸாரின் தன்னிச்சையான செயல் மீண்டும் நிகழ இடமளியாதே..!