National May 30, 2025

காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண கொடுப்பனவு வழங்குவது மற்றும் விசாரணையை செயல்திறன் மிக்கதாக்குவதற்காக 2024 நவம்பர் வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Share

அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சகோதரர்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு
காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண கொடுப்பனவு வழங்குவது மற்றும் விசாரணையை செயல்திறன் மிக்கதாக்குவதற்காக 2024 நவம்பர் வரவு செலவு திட்டத்தில் காணாமல் போனவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்காக 14 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்த 5000 குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா செலுத்துவதற்கு இயலுமாக இருந்த போதும் கடந்த 6 மாத காலத்திற்குள் அதனை பெற்றுக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
புதிய வரவு செலவு திட்டத்திற்காக இன்னும் 6 மாத காலம் மட்டுமே உள்ளது. இடைக்கால நிவாரண கொடுப்பனவுக்காக ஒதுக்கப்பட்ட அந்த நிதி எதிர்காலத்திலும் பயன்படுத்தா விட்டால் அந்த நிதியை மீண்டும் திரைச்சேரிக்கு அனுப்பும் நிலமை ஏற்படும்.
2023/24 வருடங்களில் இது தொடர்பாக 1000 மில்லியன் ரூபா நிதி முழுமையாக பயன் படுத்தாததினால் சுமார் 200 மில்லியன் ரூபா நிதியை திரைச்சேரிக்கு திருப்பி அனுப்பவேண்டி ஏற்பட்டது.
இம்முறை அந்த நிதியை முழுமையாக பயன்படுத்த தேவை என்றால் இதிலிருந்து மாதாந்தம் சுமார் 1000 விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
எமக்கு கேள்விப்பட்ட வகையில் 6 மாதங்கள் கடந்துள்ள போதும் இதுவரை ஒரு விசாரணையும் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகம் (OMP) மூலம் நடாத்தப்படவில்லை.
இதற்கு பிரதான காரணம் இந்த விசாரணைகளை நடத்துவதற்கு தேவையான அனுமதியை கோரி நீதி அமைச்சின் மூலம் அமைச்சரைவைக்கு முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு இதுவரை அமைச்சரையினால் அங்கீகாரம் வழங்கப்படாமை ஆகும்.
மேலும், பிரதம சகோதரி, வெளி விவகார அமைச்சர் சகோதரர் பாராளுமன்றத்திலும் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள சர்வதேச தலையீடு அவசியமில்லை எனவும் அது தொடர்பாக உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
அப்படி கூறிய புதிய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்த பின்னர் காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை பலப்படுத்த இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கவலைக்குரிய விடயமாகும்.
உதாரணமாக. OMP க்கு உரிய முறையில் செயல்பட தேவையான ஊழியர்கள் அன்னளவாக 250 என்பதுடன் அங்கு உள்ளது 49 பேர்களை கொண்ட பணிக்குழாம் மட்டுமே. புதிதாக ஆட்சேர்ப்புக்காக விண்ணப்பம் கோரப்பட்ட போதும் அந்த ஆட்சேர்ப்புக்காக அரசால் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.
தமது அங்கத்தவர்கள் பெரும்பாலானவர்களை காணாமல் ஆக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கம் அவர்கள் சார்பாக OMP ஐ பலப் படுத்துவதற்கும் இந்த இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பாகவும் உதாசீனத்தைக் காட்டுகின்றது.

அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கு பல மாதங்கள் செல்வதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.
அதனால் நாம் வேண்டிக்கொள்வது,

01. 2 இலட்சம் ரூபா கொடுப்பனவை வழங்குவதற்காக OMP விசாரணைக்கு தேவையான அமைச்சரவை அனுமதியை மிக விரைவில் பெற்றுதருமாறும்
02. எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் 5000 விசாரணைகளை நடாத்தி அந்த குடும்பங்களுக்கு இடைக்கால கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய சிபாரிசை நஷ்டஈட்டு அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு OMP க்கு தலையிடுமாறும்
03. அதன் அடிப்படையில் கடந்த வரவு செலவு திட்டத்தில் இது தொடர்பாக ஒதுக்கப்பட்ட முழு தொகையையும் அந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும்
04. OMP க்கு தேவையான பணிக்குழாத்தை இனைத்துக் கொள்வதற்கு ஏற்பாடு செய்யுமாறும்

எமது கோரிக்கைகளுக்காக செய்யும் தலையீடு தொடர்பாக எங்களை எழுத்து மூலம் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் குறைந்தபட்சம் ஜுன் 10 கு முன் OMP விசாரணைக்கு தேவையான அமைச்சரவை அனுமதியை OMP க்கு பெற்றுக் கொடுப்பதற்கு எப்படியாவது தலையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பிரிட்டோ பிரனாந்து
தலைவர்
காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம்

பிரதிகள்:
1 ஜனாதிபதி சகோதரர்
2 பிரதமர் சகோதரி
3 வெளி விவகார அமைச்சர் சகோதரர்
4 காணாமல் போன ஆட்கள் தொடர்பான அலுவலகம்
5 நஷ்டஈட்டு அலுவலகம்
6 தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நல்லிணக்க அலுவலகம்
7 இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
8 மக்கள் விடுதலை முன்னணி பொது செயளாலர் ரில்வின் சகோதரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *