இப்படி நடப்பது ஏன்..?
இப்படி நடப்பது ஏன்..?
ஏனைய நாட்களை போல் இந்த 21 ம் திகதியும் நீர்கொழும்பு, பால்திசந்தியில் சிலர் ஒன்றுகூடினர். அவர்கள் ஏனைய நாட்களை போல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உண்மையை வெளிப்படுத்துமாறும் நீதியை நிலைநாட்டுமாறும் கேட்டுக்கொண்டனர்.
ஆனாலும் ஏனைய நாட்களை போன்றல்ல, அந்த வழமையான சுலோகங்களுக்கு மத்தியில் இம்முறை புதிய சுலோகம் ஒன்று இருந்தது. புதிய சுலோகம் என்று சொன்னாலும் இது இலங்கையில் இடம்பெற்ற பாரிய அளவிலான குற்றச் செயல் சம்பந்தமாக நீதி கீழே செல்லும் போது பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் இருந்து முன்வைக்கப்படும் சுலோகம்.
அது மிகவும் கடுமையானது மாதிரி, ஒழுக்க விழுமியங்கள் இல்லை அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் வரும் சுலோகம் என்று பலரும் நினைக்க முடியும். அல்லது தீர்வு இல்லாத வேளையில் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படும் நிலைமைக்கு ஆளாகும் அழுத்தம், தனிமைபடுதல், மாறாத தன்மையினால்,
" குற்றவாளிகளே, கொலையாளிகளே, உனக்கு சாபம் உண்டாவதாக"
சொல்வதை தவிர,
நீதிமன்றத்தினால், அரசினால் நீதி கிடைக்காது என நினைக்கும் போது இயற்கையால் அல்லது தாம் பின்பற்றும் , நம்பிக்கை கொண்டுள்ள முறைகள் மூலம் நீதியை கோரி நிற்பதுதானே?
அதாவது பாரிய அளவிலான குற்றச் செயல்களுக்கு நீதியை நிறைவேற்ற பெரும்பான்மையான மக்கள் ஆணையில் அதிகாரத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலாவது இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு உண்மை, நீதி நிலைநாட்டப்படாது என அவர்களுக்கு விளங்கும் உணர்வு அல்லாவா இந்த சுலோகத்தில் கூறுவது.