FOD logo
  • நினைவு சுவர்
  • கேலரி
  • செய்தி அறை
  • வளங்கள்
    • ஆணைகள் மற்றும் சட்டம்
    • ஆதரவு நிறுவனங்கள்
  • தொடர்புகள்
FOD search
  • English
  • සිංහල
  • தமிழ்
  • நினைவு சுவர்
  • கேலரி
  • செய்தி அறை
  • வளங்கள்
    • ஆணைகள் மற்றும் சட்டம்
    • ஆதரவு நிறுவனங்கள்
  • தொடர்புகள்
Home / Gallery / Our Stories

Our Stories

"எங்களுக்கும் எந்நாளும் காதலர் தினமாக இருந்தால் என்று நிமல் பத்மசிறி அவர்களின் மனைவி கருத்து தெரிவிக்கையில்"

எங்களுக்கும் எந்நாளும் காதலர் தினமாக இருந்தால் என்று நிமல் பத்மசிறி அவர்களின் மனைவி கருத்து தெரிவிக்கையில்
88, 89 இளைஞர் கலவரத்தின் போது காணாமல் போன நிமல் பத்மசிறி அப்போது மூன்று பிள்ளைகளின் தந்தை

நிமல் பத்மசிறி கண்டி 1990.01.19

"காணாமல் போன கபில பந்துலவின் சகோதரி காணாமல் போனோர் தொடர்பான கொடுப்பனவு குறித்து கருத்து"

காணாமல் போன கபில பந்துலவின் சகோதரி காணாமல் போனோர் தொடர்பான கொடுப்பனவு குறித்து கருத் 17.09.1989 அன்று, உயர்தரப் பரீட்சை முடிந்து சில நாட்களில் மிரிஹான சந்தி என்ற இடத்தில் வெள்ளை வேன் மூலம் கடத்தப்பட்டு காணாமல் போனார்

கபில பிணைப்பு மஹரகம விஜேராமாய 1989.09.17

"சுதத் பிரசாந்த மற்றும் தர்மசிறி லால் பிரசாந்த ஆகியோரின் காணாமலாக்கம்"

1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு பயங்கரமான காலப்பகுதியில் பெருமளவிலான இளைஞர்கள் கடத்தப்பட்டனர்.குறிப்பாக மாத்தறை மாவட்டத்தில் இராணுவம் மற்றும் அரச சார்பற்ற நபர்களின் நடவடிக்கைகளின் கீழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர். அதில் சுதத் பிரசாந்த் மற்றும் தர்மசிறி வால் பிரசாந்த் ஆகியோரும் காணாமலாக்கப்பட்டனர்.

சுதத் பிரசாந்த மற்றும் தர்மசிறி லால் பிரசாந்த மாதரா திக்வால்லா 1989.08.06

"ஜயமான்ன அவர்களின் காணாமலாக்க"

கல் உடைக்கும் தளத்தில் வேலை செய்து தனது வாழ்வை நடத்திச்சென்ற ஜயமான்ன அவர்கள் இனந்தெரியாத நபர்களால் மாலபை பிரதேசத்தில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளார்

டபிள்யூ.ஜெயமன்னா மாலபே கஹந்தோட்ட வீடு 1989.08.19

"இரு குழந்தைகளையும் இழந்த திருமதி ஏமி மாதம் ரூ.6000 கேட்கிறார்"

இரு குழந்தைகளையும் இழந்த திருமதி ஏமி மாதம் ரூ.6000 கேட்கிறார் மாத்தறை பிரதேசத்தில் இராணுவத்தினரால் பெருமளவான இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டுள்ளதுடன் அந்தச் சோதனையில் திருமதி எமியின் அவர்களின் பிள்ளைகள் இருவரும் கடத்தப்பட்டுள்ளனர்

எச்.எம்.விமல்சிறி மாதரா திக்வால்லா 1989.07.27

"காணாமல் போன பர்னால்து துசித எனும் இளைஞனின் தாய் ரூ. 6000 கேட்கிறார்"

காணாமல் போன பர்னால்து துசித எனும் இளைஞனின் தாய் ரூ. 6000 கேட்கிறார். 88-89 காலப்பகுதியில் கொழும்பு வனாத்தமுல்லையில் வசித்த பர்னாதுல் என்ற இளைஞன் சிலரால் கடத்திச் செல்லப்பட்டு முப்பது வருடங்களுக்கு மேலாகிறது.அவரது தாயார் தற்போது மிகவும் ஆதரவற்ற நிலையில் உள்ளார். அவர் இது கேட்பது தனது காணாமல் போன பிள்ளைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மாதாந்த பணமாகும்

பர்னாடூலின் துசிதா வனத்தமுல்லை 1989.09.23

"நாம் ஏன் அக்டோபர் 27 ஐ கொண்டாடுகிறோம்?"

ஒவ்வொரு ஒக்டோபர் 27ஆம் திகதியும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சீதுவ ரத்தொலுவ நினைவிடத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை நினைவு கூர்கின்றனர்.

களுத்துறை வீட்டிலிருந்து பயகல 1989.11.20

"சுனில் பெரேரா காணாமல் போனது குறித்து அவரது சகோதரி புஷ்பா லீலானி கருத்து தெரிவித்துள்ளார்"

சுனில் பெரேரா காணாமல் போனது குறித்து அவரது சகோதரி புஷ்பா லீலானி கருத்து தெரிவித்துள்ளார் மஹரகம பிரதேசத்தில் வாழ்ந்த திரு.சுனில் பெரேரா 1988-1990 களில் காணாமல் ஆக்கப்பட்ட மற்றுமொரு இளைஞராவார்

சுனில் பெரேரா மஹரகம பமுனுவா 1989.08.14

"மாரசிங்க ஆராச்சி ருக்ஷாந்தவின் காணாமலாக்க்கம்"

88/89 காலகட்டத்தில் விளையாட்டில் ஈடுபட்டிருந்ததோடு செஞ்சிலுவைச் சங்கத்தில் பணிபுரிந்து அர்த்தமுள்ள வாழ்க்கையை நடத்திய இந்த இளைஞன் சிலரால் கடத்தப்படுகிறான்

மாரசிங்க ஆராச்சிலவின் ருக்ஷாந்த மட்டக்குலிய 1989.09.05

"மைக்கேல் எட்வர்ட்"

மைக்கல் எட்வர்ட் கொழும்பு பிரதேசத்தில் வாழ்ந்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையாவார். அவர் 1989 கலவர காலத்திலேயே காணாமலாக்கப்பட்டார்

மைக்கேல் எட்வர்ட் மாளிகாவத்தை 1989.09.04

"அநுர பியதர்ஷன சமரதுங்கவின் காணாமல்போதல்"

அநுர பியதர்ஷன இளைஞன் வாழ்ந்த கிராமத்தின் சிலர் இந்த இளைஞனை கடத்திச் சென்று காணாமலாக்கியுள்ளனர்

அனுர பிரியதர்ஷன சமரதுங்க வெயங்கொட, மாகலேகொட அவரது வீடு 1989.11.19

"பிரதீப் வீரசிங்கமற்றும் சுதத் வீரசிங்க இளைஞர்களின் காணாமல்போதல்"

பிரதீப் வீரசிங்க மற்றும் சுதத் வீரசிங்க இளைஞர்கள் இரு வேறுபட்ட முறைகளில் இரு சந்தர்பத்தில் 88 89 ல் கடத்தப்பட்டுள்ளனர்.

பிரதீப் மற்றும் சுகத் வெயங்கொட, மிஹிந்து மெவ், வீடு 1989.09.19

"சுனில் ஜயலத் இளைஞனின் காணாமல்போதல்"

1990 ம் வருடத்தில் பேராதனை பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இனம்தெரியாத இன்னும் சிலர் வருகைதந்து தலையாட்டி மூலம் சுனில் ஜயலத் எனும் இளைஞனை கடத்திச் சென்றுள்ளனர். அவர் இதுவரையில் காணாமல்போயுள்ளார்

சுனில் ஜயலத் இளைஞன் கெலிஓயா, கொஷின்ன 1990.01.13

"சன்ஜீவ தீபால் இளைஞனின் காணாமல்போனல்"

கம்பஹ பொலிஸார் வந்து சன்ஜீவ தீபால் இளைஞனை கைது செய்துள்ளதுடன் பின்னர் அவரை காணாமலாக்கப்பட்டுள்ளார்

சஞ்சீவ தீபால் வெயங்கொட பண்டாரநாயக்கபுர 1989.12.18

"ஜமால்தீன் டிலான் வாலிபரின் காணாமல்போனல்"

2007 ம் வருடம் கடற்படையின் கப்பம் குழுவினரால் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமலாக்கப்பட்ட வழக்கு இன்றுவரை விசாரணையில் உள்ளது. அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு தரப்பாக ஜமால்தீன் டிலானை அடையாளப்படுத்தலாம். எது எப்படியாக இருந்தாலும் முன்னால் கடற்படை தளபதி இந்த வழக்கின் ஒரு சந்தேக நபராவர்

ஜமால்தீன் டிலான் கொள்ளுப்பிட்டி 2008.09.18

"ஜயரத்ன சேனநாயக்க அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை"

88,89 காலப் பகுதியில் இலங்கையில் நடந்த சிவில் போராட்டத்தின் போது 1989.11.20ம் திகதி காணாமல் ஆக்கப்பட்டதற்கு உள்ளான இன்னுமொரு அரசாங்க ஊழியரான மெணிக்கின்ன பிரதேசத்தில் வசித்த ஜயரத்ன சேனாநாயக்க அவர்களை அறிமுகப்படுத்த முடியும்

ஜயரத்ன சேனாநாயக்க பேராதனை பொலிஸ் நிலையம் அருகில் 1989.11.20

"வட்டோருதந்திரிகே ஜயதிலகவின் சகோதரியின் கருத்து"

கொஸ்ஹின்ன கெலிஒயவில் வசிக்கும் இளைஞன் ஜயதிலக்க பொலிஸ் சீறுடை அனிந்த இனம்தெரியாத சிலரினால் பலவந்தமாக கடத்திச் சென்று காணாமலாக்கியுள்ளனர்.

வத்தொருதந்திரிகே ஜயதிலக கெலிஓயா, கொஷின்ன 1990.01.13

"அஜித் லக்ஷ்மன்"

1988/1989 வனசெயல் காலப்பகுதியில் பெருமளவு இளைஞர்களின் உயிர் இழப்புகள் நடந்தன. அஜித் லக்ஷ்மன் அதில் ஒரு இளம் உயிர். வீட்டிற்கு அண்மையில் உள்ள தேவஸ்தானத்தின் திருவிழாவிற்காக சோடனைகள் செய்யும் வேளையில் தனது கிராமத்தின் ஒருசிலரின் வழிகாட்டலில் அடையாளம் தெரியாத குழுவினரால் கடத்திச்செல்லப்பட்டார்.

அஜித் லக்ஷ்மன் பதகிகோடெல்லா தேவாலயம் 1989.10.21

"திரு.யூ.பி.விமலநாத காணாமல் ஆக்கப்பட்டமை"

88 89 வன்செயல் காலப் பகுதியில் இராணுவம் மற்றும் பொலிஸ் சுற்றிவலைப்பின் போது காணாமல் ஆக்கப்பட்ட நபராக விபலநாத அவர்களை அடையாளப் படுத்த முடியும். அப்போது அவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாக இருந்தார். பொருளாதார நெருக்கடி காரணமாக விமலாநாதவின் மனைவி தொழில் நிமித்தம் மத்திய கிழக்கு நாட்டிற்குச் சென்றிருந்ததுடன் அந்த காலப்பகுதியில் இந்த துரதிர்ஷ்டவசமான தலைவிதியை முகம் கொடுக்க வேண்டிய நிலமை விமலாநாத குடும்பத்திற்கு
ஏற்பட்டது.

யூ.பி.விமலநாத மீரிகம, போருக்கமுவ வீட்டில் 1989.12.15

"குசும்சிறி டி சில்வா"

குசும்சிறி டி சில்வா பல்கலைக்கழக பட்டதாரியும் ஒரு பிள்ளையின் தந்தையும் அன்பு மனைவியின் கனவருமாவர். இரவில் சிலர் வீட்டிற்கு வந்து அவரையும் அவரது தம்பியையும் கடத்திச் சென்றுள்ளனர். இது அவரது இருண்டகதை

குசும்சிறி டி சில்வா ஜா கால்வாய் 1983.11.11

Sorry! No result to display.

எங்கள் செய்திமடலில் சேரவும்

எங்கள் பணியைப் பற்றிய சமீபத்திய கதைகள் மற்றும் செய்திகளைப் பெறுங்கள், மேலும் நீங்கள் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளைக் கண்டறியவும்.

34/2, கோட்டா சாலை,
பொரளை, இலங்கை
+94763603730
fodlanka@gmail.com
  • கேலரி
  • நினைவு சுவர்
  • தொடர்புகள்

Copyright © FOD

Terms of service Privacy Policy

Made by Saberion