ஏ.ஜீ. கருணாரத்ன, மாத்தளை, ஓவிலிகந்தவில் வசித்து வந்தார்.
ஏ.ஜீ. கருணாரத்ன, மாத்தளை, ஓவிலிகந்தவில் வசித்து வந்தார்.
சந்திரலதா ரணசிங்க, கருணாரத்னவின் மனைவி. இந்த இரண்டு பேரும் காதல் தொடர்பு மூலமே திருமணம் செய்துக்கொண்டார்கள், வீட்டில் விருப்பமில்லை என்று சொன்னாலும், இந்த இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டு ஓவிலிகந்த கிராமத்தில் ஒரு மூலையில் உள்ள றபர் கேல்ல என்று சொல்லும் இடத்திற்கு வசிப்பதற்காகச் சென்றார்கள்.
இந்த புதிய குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் கிடைத்தன.
கருணாரத்ன கூலி வேலை செய்துகொண்டு, சிறிதாக விவசாயமும் செய்துகொண்டுதான் குடும்பத்தின் பாரத்தை சுமந்தார்.
இவ்வாறு இருக்கும் போது 1989.07.14 காலை இராணுவத்தினர் றபர் கேல்லவை சுற்றிவலைத்தனர். ஏனெனில் ஜேவிபி செயற்பாட்டாளர்கள் உயிர் பாதுகாப்பை கருதி மறைந்து இருந்த இடம்தான் இந்த றபர் கேல்ல என்பது.
கருணாரத்னவையும் அன்று அழைத்துச் சென்றனர். இன்றுடன் 36 வருடங்கள் ஆகின்றன. அவரது மனைவி
இன்று வரை இந்த இழப்பு குறித்து ஞாபகப் படுத்துவது வேதனையுடனாகும்.