National June 30, 2025

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த ஜுன் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் Volker Türk அவர்களுக்கும் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

Share

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கடந்த ஜுன் 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர்
Volker Türk அவர்களுக்கும் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியம் என்பவற்றின் பிரதிநிதிகள் குழுவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

கடந்த 26 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் 1987-90 காலப் பகுதியில் தெற்கில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது மற்றும் கடத்திச் சென்று சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட ஆட்களுக்கு நிரைவேற்ற வேண்டியவை தொடர்பான கோரிக்கைகள் உள்ளடங்கிய பிரேரணைகளை தயாரித்து
ஜெனீவா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டதுடன் உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் போது அரசாங்கத்துடன் செயல்படும் முறைகள் பற்றி முக்கியமான தீர்மாணங்கள் சில அங்கு மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *