சட்டத்திற்கு எமது துன்பம் தென்படாவிட்டாலும் சட்ட மாணவர்கள் எம்மை புரிந்து கொண்டார்கள்..
சட்டத்திற்கு எமது துன்பம் தென்படாவிட்டாலும் சட்ட மாணவர்கள் எம்மை புரிந்து கொண்டார்கள்..
நாம் இன்று முதன் முதலாகவே சட்டக் கல்லூரிக்கு வந்திருக்கிறோம். அது எமது யாருடைய பிள்ளைகளையும் ஒப்படைப்பதற்கு அல்ல. நாம் சென்றது சட்டத்தை கற்கும் அந்த பிள்ளைகளுக்கு எமது கதையை கூறுவதற்காகும்.
அன்று இராணுவத்தில்,பொலிஸில், முகாம்களில் சரணடையாவிட்டால் எமது பிள்ளைகளும் இந்தக் கல்லூரியில் படித்து வெளியேறிச் சென்றிருப்பார்கள். ஆனாலும் அப்படி நடக்கவில்லை. அன்று இந்த நாட்டில் சட்டம் இருக்கவில்லை.
உலகில் கடுமையான குற்றச் செயல் மனிதன் ஒருவரை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது என்றாலும் 2018 க்கு முன் மனிதர்களை காணாமல் ஆக்கப்படுவது கடுமையான குற்றச் செயல் என ஏற்றுக்கொண்ட சட்டம் எமது நாட்டில் இருக்கவில்லை.
ஆனால் நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் மூன்று மாதங்கள் பலவந்தமாக தடுத்து வைக்க முடியும் என்ற பயங்கரவாத தடுப்புச் சட்டம் இருந்தது, அது இன்னும் உள்ளது. எமது அன்புக்குறியவர்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களை, படுகொலை செய்தவர்களை தடுத்து வைத்து விசாரிக்கவில்லை மற்றுமன்றி குற்றச் செயலுடன் தொடர்புடைய பாதுகாப்புப் பிரிவினரை சட்டத்துக்குப் சிக்கவைக்க முடியாமல் பொறுப்புக் கூறலில் இருந்து விடுதலை செய்யும் சட்டம் என்ற ஒன்றை நடைமுறை படுத்தினர். அதனால்தான் முறைப்பாடு செய்ய பொலிஸ் நிலையம் சென்றாலும் அந்த காலத்தில் பொலிஸார் எமது முறைப்பாட்டை எழுதாமல் கூட இருந்தார்கள்.
இது உலகில் சிறந்த நாடு என்று நிறைய பேர் சொன்னாலும் இலங்கை என்பது காணாமல் ஆக்கப்பட்டுவதில் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள நாடு.
இந்து சமுத்திரத்தின் முத்து என்று சொன்னாலும் தற்போது மனிதப் புதைக்குழிகள் 24, இன்னும் எத்தனைதான் கண்டுபிடிக்கப்படுமோ தெரியாது. இவற்றை அகழ்வதை காணும்போது என்னுடையவரும் இங்கே எங்காவது ஒரு இடத்தில் களவாக புதைத்திருப்பார்கள் என்று நாம் எல்லோரும் நினைக்கிறோம்.
மரணிக்க முன் எம்மவர்களுக்கு என்ன நடந்தது, யார் அப்படி செய்தார்கள் என்ற உண்மையை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நாம் இழப்பீடு கோருவது மாளிகை கட்டுவதற்கு அல்ல, இழப்பீடு என்பது பாதிக்கப்பட்டவர்களின் உரிமை. அப்படி ஒன்று நடந்துள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.
2018 கொண்டுவந்த சட்டத்தால் 35 வருடங்களுக்கு முன்பு செய்தவற்றிக்கு தண்டனை வழங்க முடியாது. அப்படி செய்ய முடியாது என்பதனால்தான் நாங்கள் அதற்கு விசேடமான சட்டக் காப்பை கேட்கிறோம். குற்றம் செய்தவர்களை எப்படியாவது சட்டத்திற்கு உட்படுத்த வேண்டும் என்பதே அன்றி நாம் கேட்பது அவர்களை காணாமல் ஆக்குவதற்கோ அல்லது மரண தண்டனை நிரைவேற்றச் சொல்லியோ அல்ல. அந்த இரண்டிற்கும் நாம் எதிர்ப்பு. காரணம் அவர்கள் இந்த குற்றச் செயலை செய்ததற்காக, யாரும் அவர்களுக்கு இந்தக் குற்றச்செயலை செய்யத் தேவையில்லை. எமக்குத் தேவை எமக்குச் செய்த இந்தக் குற்றச் செயல் மீண்டும் இந்த பூமியில் எந்தவொரு மனிதனுக்கும் நடக்காமல் இருக்கும் நிலைக்கு சகல விடயங்களும் சீராக வேண்டும் என்பதே.
எப்படியும் காணாமல் ஆக்கப்படுவது மீண்டும் எந்த வேளையிலும் நடக்காமல் இருப்பதற்கு தேவையான பொறுப்புக் கூறும் பொறிமுறையை ஏற்படுத்தவும். அதனால்தான் 35 வருடங்கள் சென்றும், கிடைத்தது ஒன்றும் இன்றியும் நாம் இதனை பிடித்துக்கொண்டு இருக்கிறோம்.
எம்மை புரிந்து கொண்டு எம்முடன் இனைந்துகொண்டு இந்த சமூகத்தின் பொறுப்பு தொடர்பாக சட்டக் கல்லூரி உள்ளே பேசுவதற்கு சந்தர்பத்தை ஏற்படுத்தித் தந்த இலங்கை சட்ட மாணவர் சங்கம், இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் அவர்கள், ஆசிரியர் குழாம் மற்றும் முகாமைத்துவ சபை ஆகியவற்றிக்கு எமது நன்றிகளை தேரிவித்துக் கொள்கிறோம்.