National June 4, 2025

இடம்: யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மயானத்திக்கு பக்கத்தில்

Share

இடம்: யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மயானத்திக்கு பக்கத்தில்
⛔ நிகழ்வு: அபிவிருத்தி நடவடிக்கையின் போது அங்கு தொழிலாளர்களுக்கு எதேச்சையாக மனித எலும்புகள் சில கிடைத்தன.
⛔ முறைப்பாடு: நிகழ்வு தொடர்பாக அபிவிருத்தி நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகளினால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை அறிவுறுத்தியுள்ளனர்.
⛔ நீதிமன்ற கட்டளை: யாழ்ப்பாண பொலிஸார் அந்த நிர்மாணப் பனிகளை நிறுத்துமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் கட்டளை ஒன்றை கோரியதுடன் அந்த நிர்மாணப் பணிகளை முழுமையாக நிறுத்தி விசாரணைக்காக அகழ்வாய்வுப் பணியை மேற்கொள்வதற்கு கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
⛔ அகழ்வாய்வு நடவடிக்கை: குறித்த இடத்தை நீதவான் கண்காணித்து, விஷேட குழுவினரின் மேற்பார்வையில் அகழ்வாய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
⛔ 2025.06.02 திகதி இடம்பெற்ற அகழ்வாய்வின் போது 05 சடலங்களுக்கு உரிய எழும்பு பாகங்கள் சில கிடைக்கப் பெற்றுள்ளன.
குறிப்பு:- தற்போது இந்த எலும்புப் பாகங்கள் யாருடையது? இது எந்த காலத்திற்கு உரியது? இது சாதாரணமாக அடக்கம் செய்யப்பட்டதா? இல்லையெனில் குற்றச் செயலுக்கு உட்பட்டதன் பின்னர் சட்டத்திற்கு அப்பால் மற்றும் குடும்ப உறவினர்களிடம் மறைத்துக்கொண்ட செயலா என்பதை தெளிவு படுத்திக் கொள்ளவில்லை.
அது தொடர்பாக சட்ட வைத்திய விசாரணை, நீதிமன்ற தொல்பொருளியல் விசாரண மற்றும் கால அளவீட்டிற்கான காபன் நகல் பரிசோதனை செய்யப்பட வேண்டியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *