பாரிய அளவிலான குற்றச் செயல்களுக்கு நீதியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் தவற விட்டுள்ளது
பாரிய அளவிலான குற்றச் செயல்களுக்கு நீதியை நிலைநாட்ட இலங்கை அரசாங்கம் தவற விட்டுள்ளது". UN முடிவை மாற்றி அமைக்க புதிய அரசாங்கமும் தயாராக இல்லையா?
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு இன்னும் 3 மாதங்கள் போன்ற குறுகிய காலம்தான் உள்ளது. அந்த நேரமாகும் போது புதிய அரசாங்கம் பதவிக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகும்.
கடந்த ஒவ்வொரு வருடமும் இலங்கை தொடர்பாக வெளியிட்ட ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கையில் இலங்கை தொடர்பாக குறிப்பிடப்பட்ட விடயங்கள் இவையாகும்,
"கடந்தகால குற்றச்செயல்கள் மற்றும் பாரிய அளவிலான மனிதப் படுகொலைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசு தொடர்ந்தும் தவற விட்டுள்ளது"
இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டது மாதிரி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவும் உண்மையை வெளிப்படுத்துவது, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் குடும்பங்களுக்கு நீதியை நிலைநாட்டுவது சம்பந்தமாகவும் சரியான தீர்வு இல்லாமல் கழிப்பது இது ஆறாவது வருடமாகும்.
கடந்த அரசாங்கங்கள் குற்றவாளிகளை பாதுகாத்தது அல்லாமல் இந்த தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு கூட உணரக்கூடிய எதையும் செயல்படுத்த தவறிவிட்டது.
புதிய அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள மக்கள் ஆணையின் பிரதான அபிலாசையாக இருந்தது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்டுவதாக இருந்தாலும், புதிய சுற்றில் ஆரம்பிப்பதற்கு கைவைத்தது அன்றி அதன் முன்னேற்றம் தொடர்பாக உறுதியை பெற்றுத்தர இன்னும் முடியவில்லை. அப்படி என்றால் புதிய அரசாங்கத்திற்கு, எதிர்பார்த்த மாற்றத்திற்கு ஒரு வருடம் ஆகின்ற வேளையில் மீண்டும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூற வேண்டி வருவது,
கடந்தகால குற்றச் செயல்கள் மற்றும் பாரிய அளவிலான மனிதப் படுகொலைகளுக்கு நீதியை நிலைநாட்ட இலங்கையின் புதிய அரசாங்கமும் தவற விட்டுள்ளது' என்றாகும்.
அது அப்படி நடப்பதற்கு நீங்கள் விருப்புகிறீர்களா?