நிலன்த ஜயவர்தனவுக்கு எதிரான மனுவுக்கு என்ன நடக்கிறது..?
நிலன்த ஜயவர்தனவுக்கு எதிரான மனுவுக்கு என்ன நடக்கிறது..?
நிலன்த ஜயவர்தன, அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி. அவருக்கு எதிராக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தற்போது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக தெரிந்து தெரிந்தும், அது தொடர்பாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தும் அந்த குற்றச் செயலை தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக நிலன்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபருக்கு கட்டளை இடுமாறு சமூக மற்றும் சமூக மையத்தின் இயக்குனர் அருட் தந்தை ரொஹான் சில்வா மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவரான சுராஜ் நிலங்க மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றை முன்வைத்திருந்தனர்.
அந்த மனுவை பரிசீலிப்பதற்காக அக்டோபர் மாதம் 14ம் திகதி மனுவை அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
இதற்கு முன்னரும் நிலன்த ஜயவர்தனவுக்கு உயர் நீதிமன்றம் நிர்ணயித்தபடி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தால் நஷ்டஈடு வழங்க வேண்டி ஏற்பட்டது.