FOD logo

நினைவு சுவர்

  • English
  • සිංහල
  • தமிழ்

குசும்சிறி த சில்வா

விடுபட்ட தேதி 11/11/1989 இடம் காணவில்லை ஜா- எல வீட்டிலிருந்து

வன்னியாராச்சிகே டொன் அஜித் லக்ஷ்மன்

விடுபட்ட தேதி 21/10/1989 இடம் காணவில்லை ஹல்பே, பதங்கிகொடல்ல தேவாலயத்திலிருந்து

கபில பந்துல

விடுபட்ட தேதி 17/09/1989 இடம் காணவில்லை மஹரகம விஜேராமையிலிருந்து

மைக்கேல் எட்வர்ட்

விடுபட்ட தேதி 04/09/1989 இடம் காணவில்லை R. B. 18 - மாளிகாவத்தை வீட்டிலிருந்து

சந்திம தேரர் (சமிந்த சிறீநாத் வீரசிங்க)

விடுபட்ட தேதி 19/11/1989 இடம் காணவில்லை பன்வில வீட்டிலிருந்து

ஜானக சமன் குமார மற்றும்

விடுபட்ட தேதி 19/11/1989 இடம் காணவில்லை பன்வில வீட்டிலிருந்து

டபிள்யு. பி. ரஞ்சித் விஜேரத்ன மற்றும் டபிள்யு. பி. லலித் விஜேரத்ன

விடுபட்ட தேதி 12/12/1989 இடம் காணவில்லை கொழும்பு பொலிஸ் நிலையமொன்றிலிருந்து

ஷாந்த குமார

விடுபட்ட தேதி 13/11/1990 இடம் காணவில்லை கண்டி பொலிஸ் பொலிஸிலிருந்து

லிச்சோவி நிசான்ந்த வீரசிங்க

விடுபட்ட தேதி 16/11/1989 இடம் காணவில்லை வத்தேகம மத்திய மஹா வித்தியாலயத்தித்தின் அருகில்

விமல்சிறி மற்றும் வசந்த

விடுபட்ட தேதி 27/07/1989 இடம் காணவில்லை மாத்தறை திக்வல்லயிலிருந்து

ஜெயமண்ணா

விடுபட்ட தேதி 19/08/1989 இடம் காணவில்லை கஹந்தோட்ட மாலபே வீட்டிலிருந்து

மாரசிங்க ஆராய்ச்சி ருக்ஷான்

விடுபட்ட தேதி 05/09/1989 இடம் காணவில்லை மட்டக்குளியா வீட்டிலிருந்து

சுனில் ஜயலத்

விடுபட்ட தேதி 13/01/1990 இடம் காணவில்லை கெலிஓய கொடபொல வீட்டில்

சுனில் பெரேரா

விடுபட்ட தேதி 14/08/1989 இடம் காணவில்லை பமுனுவ , மஹரகம

சமிந்த லக்ஷ்மன் சேனனாயக்க

விடுபட்ட தேதி 16/12/1989 இடம் காணவில்லை பூகொட மாமா வீட்டிலிருந்து

கிரம்பே கெதர சமரசிங்க

விடுபட்ட தேதி 09/10/1989 இடம் காணவில்லை பல்லேகல இராணுவ முகாமிலிருந்து

தர்மசிறி பிரசாந்த

விடுபட்ட தேதி 08/08/1989 இடம் காணவில்லை Dikwella kottegoda temple

பர்னால்டு துசித

விடுபட்ட தேதி 23/09/1989 இடம் காணவில்லை வனாத்தமுல்லை

ஜமால்தீன் திலான்

விடுபட்ட தேதி 17/09/2008 இடம் காணவில்லை முபாரக் அன்வர் அலியின் தெஹிவளை வீட்டிலிருந்து

அனுர பிரியதர்ஷன

விடுபட்ட தேதி 19/11/1989 இடம் காணவில்லை மாகலேகொட, வெயங்கொட வீட்டிலிருந்து

பி. ஹேமந்த அஜித் சந்திரசிறி

விடுபட்ட தேதி 12/10/1989 இடம் காணவில்லை ஹொரகொல்முல்ல வீட்டிலிருந்து

சமந்த கல்யாண

விடுபட்ட தேதி 09/10/1989 இடம் காணவில்லை திவுலப்பிட்டிய பொலிஸிலிருந்து

சுகத் வீரசிங்ஹ மற்றும் பிரதீப் வீரசிங்க

விடுபட்ட தேதி 19/09/1989 இடம் காணவில்லை பண்டாரணாயக்க மாவதை, வெயங்கொட வீட்டிலிருந்து

சுதத் பிரசாந்தா

விடுபட்ட தேதி 06/08/1989 இடம் காணவில்லை மாத்தறை திக்வல்லயிலிருந்து

காமினி சுகதசிறி

விடுபட்ட தேதி 28/10/1989 இடம் காணவில்லை ஹூனுமுல்ல இராணுவ முகாமிலிருந்து

யு.பி. விமலநாத

விடுபட்ட தேதி 15/12/1989 இடம் காணவில்லை மீரிகம, பொருக்கமுவ வீட்டிலிருந்து

ஜயரத்ன சேனாநாயக்க

விடுபட்ட தேதி 20/11/1989 இடம் காணவில்லை பேராதனை பொலிஸூக்கு அருகாமை பிரதான வீதியில்

வசந்த காமினி அபயவிக்றம

விடுபட்ட தேதி 19/09/1989 இடம் காணவில்லை வாவின்ன வீட்டிலிருந்து

Lal Prasantha

விடுபட்ட தேதி 08/08/1989 இடம் காணவில்லை Dikwella

பியல் புஷ்ப குமார

விடுபட்ட தேதி 20/11/1989 இடம் காணவில்லை களுத்துறை, பயாகல வீட்டிலிருந்து

சஞ்சீவா தீபால்

விடுபட்ட தேதி 18/12/1989 இடம் காணவில்லை வெயங்கொட வீட்டில்

W.P. Lalith Wijerathna

விடுபட்ட தேதி 12/12/1989 இடம் காணவில்லை At a Police Staion in Colombo

நிமல் பத்மசிறி

விடுபட்ட தேதி 19/01/1990 இடம் காணவில்லை கண்டி

Sorry! No result to display.

வெளியே போ

சமிந்த லக்ஷ்மன் சேனனாயக்க

விடுபட்ட தேதி 16/12/1989
இடம் காணவில்லை பூகொட மாமா வீட்டிலிருந்து

நான் ஒரு பாடசாலை அதிபர். என்னை போல் என் குழந்தைகளும் கல்வியை நேசித்தார்கள். எனது மகன் சமிந்த எனது மைத்துனர் வீட்டில் தங்கி இருந்தார். 1989.12.16ஆம் திகதி பொலிஸில் வேலை செய்த எனது மைத்துனர் எனது மகன் கடத்தப்பட்ட தகவலை தெ;ரிவித்தார். நாம் பாரளுமன்ற உறுப்பினர் ஒருவரை அழைத்துக்கொண்டு திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்றோம் அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர்; பிள்ளைகளை வளர்த்தது ஜே.வீ.பீ இயக்கதில் இணைக்கவா என எங்களிடம் கேட்டார். எனது மகன் ஜே.வீ.பி உடன் இணைந்து செயற்பட்டதை நான் மறுத்த போது அவர் ஓர் ஆவணத்தை காண்பித்து ஜே.வீ.பி உடன் செயற்பட்ட பெயர் பட்டியலில் சந்தன சேனநாயக்கா என்ற பெயர் இருப்பதாக சுட்டி காட்டினார். நான் எனது மகனின் பெயர் சந்தன அல்ல சமிந்த என்றதும் என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அதை குறித்து கொண்டார்.
நாம் எமது மகனை தொடர்ந்து தேடினோம். எமது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் ஜெயக்கொடியிடம் தெரிவித்தோம். ஐ.ஜீ.பி க்கும் ஐ.நா மனித உரிமை குழுவுக்கும் எழுதினோம். ஐ.நாவின் உதவியுடன் முகாம்களுக்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
எனது மகன் காணாமல் போய் இரு நாட்களின் பின் நீர்கொழும்பு உதவி பொலிஸ் அத்தியட்சரை சந்திக்கச் சென்ற போது அங்கிருந்த அதிகாரியொருவர் கேட்டார் பொலிஸ் தொலைந்த குழந்தைகளை கண்டுபிடிக்கும் கடவுளா என. பின்னர் வேறொரு பொலிஸ் அதிகாரி குடஹெட்டிவை சந்தித்த போது குடஹெட்டி கூறினார் அவரை தேடுவது பயனற்ற வேலை. சமிந்த வெள்ளை வானால் கடத்தப்பட்டுள்ள பெயர் பட்டியலில் அடங்குகிறார் என்றார்.
அவ்வாறு இருந்தும் எமது தேடலை தொடர்ந்தோம். எம்மால் ஆனவற்றை செய்தோம். பல இடங்களுக்கு சென்று தேடினோம். இந்த வேளையில் பிள்ளைகளின் படிப்பும் வீட்டு வேலையும் புறக்கணிக்க பட்டது. எங்கே சமிந்த? யார் அவரை கடத்தினார் என்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கவில்லை. ஆகவே சமிந்த கொலை செய்யப்பட்டார் என நம்பினோம். நாம் மரண சான்றிதழ் பெற பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்த பிரதியை பெற சென்ற போது அந்த முறைப்பாடு தொலைந்து விட்டது என கூறப்பட்டது.
ஒரு கல்விமானாக நான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இணையவில்லை. நான் நம்புகிறேன் எமது தொகுதியில் உள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைவர்கள் எனது மகன் ஜே.வீ.பி இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டார் என தப்பாக எண்ணியுள்ளனர்.
எனது பாடசாலைக்கு அருகில் உடல்கள் எரிக்க பட்டு அந்த புகை பாடசாலை வளாகத்தை அடைந்தது. சில சமயம் எரிந்த பிணங்களின் மணத்தை ஈடுகொடுக்க முடியாது நாம் தற்காலிகமாக பாடசாலையை மூடி உள்ளோம்.
சாட்சியம் பிரான்சிஸ் சேனநாயக்க லக்ஷ்மன் சேனநாயக்காவின் தந்தை

ஷாந்த குமார

விடுபட்ட தேதி 13/11/1990
இடம் காணவில்லை கண்டி பொலிஸ் பொலிஸிலிருந்து

ஷாந்த குமார எனது மூத்த மகன். 15 வயதில் பாடசாலையை விட்டு விலகி குடும்ப பொறுப்பை சுமக்க கூலி வேலை செய்தான்.
1990 கார்த்திகை மாதம் 9ஆம் திகதி எனது மகன் தனது நண்பர்களுடன் போகம்பற மைதானத்தில் விளையாடிக் கொண்டு இருந்த போது பொலிஸாரால் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்த பிள்ளைகளை பொலிசார் தாக்கிய பின் சிலரை கைது செய்தனர். அதில் ஒருவர் எனது மகன். திருட்டு சம்பவம் ஒன்றின் சந்தேகத்தின் பெயரிலேயே அழைத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் கேள்விபட்டவுடன் நான் கண்டி பொலிஸ் நிலையத்துக்கு விரைந்து சென்ற போது அங்கு ஷாந்தவை கண்டேன். நான் எனது மகனின் கைது செய்தததை புகார் செய்து ஓர் சட்டத்தரணியை நிறுத்தினேன். மூன்று நாட்கள் நான் அங்கு சென்ற போது விசாரணை முடிந்த பின் ஒரு கிழமையுள் விடுதலை செய்யப் படுவார் என பொலிஸார் கூறினர்.
நான்காம் நாள் எனது மகன் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பி சென்றதாக கூறினர்.ஆனால் நான் அதை நம்ப மறுத்தேன். அவ்வாறு அவன் தப்பித்தால் என்னை தொடர்பு கொள்வான். எப்படி பொலிஸ் பாதுகாப்பில் மூன்று நாட்கள் இருந்த எனது மகன் காணாமல் போக முடியும்?
பல இளைஞர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பொலிசாரால் தாக்கப்பட்டு சித்திரைவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிலர் எனது மகன் அடி வாங்கியதை பார்த்துள்ளனர். இன்னொரு பிள்ளை எனது மகனுடன் கைது செய்யப்பட்டவர் ஒரு கிழமையின் பின் விடுதலை செய்யப் பட்டார். பொலிஸ் அவர்களிடம் பலவந்தமாக வேலை வாங்கியுள்ளனர். நான் மேலும் கேள்விகளை அந்த சிறுவனிடம் கேட்டபோது அந்த பையன் பயத்தின் காரணமாக பதில் சொல்ல மறுத்துவிட்டார். எனது மகனிடம் இருந்து திருட்டை ஒப்புக்கொண்டு பிழையான வாக்கு மூலத்தை பெற பொலிஸ் என் மகனை சித்திரைவதை செய்தது என நான் பின்னர் அறிந்து கொண்டேன்.
நான் எனது தேடலை ஒரு போதும் நிறுத்தவில்லை. நான் ஜனாதிபதிக்கும் எழுதினேன். 1996 ஆம் ஆண்டு நான் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததன் பலனாக 15இ000 ரூபாய் பெற்று கொண்டேன். நான் என்னால் முடியுமான யாவற்றையும் செய்தேன் ஆனால் என் மகனுக்கு என்ன நடந்தது என்று அறிய முடியவில்லை. கொழும்பில் இருந்து வந்த பொலிஸ் குழு கண்டி பொலிஸ் நிலையத்தை சோதனை செய்தது. ஆனால் எந்த பலனும் இல்லை. நான் கண்டி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சத்திரிடம் சென்ற போது எனது மகன் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டுள்ளார் என கூறப்பட்டது. ஆனால் அவர்கள் அந்த இடத்தை கூறவில்லை. எனது மகனை தேடி கண்டு பிடித்து தருவதாக கூறினர்.
ஆனால் எனது மகன் திரும்பவில்லை.
பொலிஸாரால் எனது மகன் காணாமல் ஆக்கப்பட்டார்

வாக்குமூலம்- வீரன் கதிரா ஷாந்த குமாரவின் தாய்

வன்னியாராச்சிகே டொன் அஜித் லக்ஷ்மன்

விடுபட்ட தேதி 21/10/1989
இடம் காணவில்லை ஹல்பே, பதங்கிகொடல்ல தேவாலயத்திலிருந்து

எனது பெயர் புஷ்பா வன்னியாராச்சி. எனது இளைய சகோதரரான வன்னியாரச்சிகே டொன் அஜித் லகஷ்மன் எப்போதுமே தேவாலயத்துடன் நெருக்கமான தொடர்பை கொண்டிருந்தார். நாங்கள் கம்பஹா மாவட்டத்தின், கடான , ஹல்பே என்ற கிராமத்தில் வசித்தோம். என் தம்பி எப்போதும் பிராணிகளை வளர்ப்பார். மிகவும் அமைதியானவரான எனது தம்பியின் அமைதியான சுபாவம் காரணமாக அவர் அனைவரின் மத்தியிலும் பிரபல்யம் அடைந்திருந்தார். 1971.05.20 அன்று பிறந்த எனது தம்பியுடன் நான் மிகவும் பாசத்துடன் இருந்தேன்.
வழமைபோன்று அன்றைய தினமும், 1989.10.21 வழமைபோன்று எமது வேலைகளை நாம் செய்துகொண்டிருந்தோம். இளைஞர் கழக உறுப்பினர் என்ற ரீதியில் தம்பி பதஹிகொடல்ல தேவாலய திருவிழாவுக்கான அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தார். தேவாலய அலங்கார வேலைகள் நடக்கையில் நானும் அங்கே சென்றிருந்தேன். அங்கே தம்பியின் வயதையொத்த அயலிலுள்ள நண்பர்களும் இருப்பதை நான் கண்டேன். சற்று நேரம் தேவாலயத்தில் இருந்த நான் தாய்க்கு உதவுவதற்காக மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டேன்.
தம்பி இரவை தேவாலயத்தில் கழிப்பதற்காகச் சென்றிருந்ததால் நாங்கள் தூங்குவதற்குத் தயாராகும் போது வீட்டுப் பிரதான கதவினை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனது தாய் கதவைத் திறந்ததும் சிலர் வீட்டினுள்ளே வந்தனர். அவர்களில் ஒருவர் வீட்டு விளக்கினை அணைத்தார். எமது அயலவர்களான அந்தனி பாரிசும், பற்றிக் வீரக்கொடியும் வீட்டினுள் நுழைந்தனர். பற்றிக் வீரக்கொடி அப்போது மாகாண சபை உறுப்பினராக இருந்தார். அந்தனி பாரிஸ் ஊர் காவல் படை வீரராக இருந்தார். அத்துடன் இராணுவத்தின் சீருடை போன்று ஆடை அணிந்திருந்த ஏனைய சிலர் எமது தம்பியின் பெயரைக் கூறி அழைத்து வீட்டைச் சோதனையிட ஆரம்பித்தனர். தம்பி வீட்டில் இல்லை என அவர்கள் அறிந்துகொண்டதும் அவர்கள் வீட்டை விட்டுச் சென்றுவிட்டனர். எனது தாய் அவர்களின் பின்னால் சென்றாலும், சிறிது நேரத்தில் அவர் பெரும் இக்கட்டான நிலையில் வீடு திரும்பினார்.
இரவு வேலை முடிந்து திரும்பிய எனது தந்தை சந்தேகப்பட்டுக் தேவாலயத்திற்கும் சென்று அங்கே எனது தம்பியைப் பற்றி விசாரித்திருக்கின்றார். எமது வீட்டுக்கு வந்த நபர்கள்; தேவாலயத்திற்கும் சென்றிருக்கின்றனர். எனது தம்பியின் வயதுடைய தம்பியின் நண்பர்கள் அங்கு ஒளிந்திருந்து மாமா, அஜித்தைக் கூட்டிச் சென்றுவிட்டார்கள் எனக் கூறியுள்ளனர். பின்பு எனது தந்தை தேவாலயத்தை விட்டு வெளியேறும் போது, கோயில் திருவிழாவுக்குப் பொருட்கள் விற்க வந்த வியாபாரி ஒருவர், சிலர் தம்பியை அழைத்துச் சென்றதையும் தான் கூட்டிச் செல்லப்பட்டதை உணர்த்துவதற்காகத் தம்பி அவரின் போர்வையை வேலியில் போட்டதையும் கண்டதாகக் கூறினார்.
இதன் பின்னர் நாம் தம்பியைப் பல இடங்களிலும் தேடினோம். 1989.10.27 அன்று நாங்கள் கொச்சிக்கடைப் பொலிசில் முறைப்பாடு செய்தோம். ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தம்பி காணாமல் போனதற்காக 1994 ஆம் ஆண்டு எமக்கு 15000 ரூபாய் நட்டஈடு வழங்கினார்கள். பின்பு நாங்கள் பற்றிக் வீரக்கொடிக்கு எதிராகவும் அந்தனி பாரிசுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கினைத் தாக்கல் செய்தோம். ஆனால் எமக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

W.P. Lalith Wijerathna

விடுபட்ட தேதி 12/12/1989
இடம் காணவில்லை At a Police Staion in Colombo

We were branded as JVP and people tried to evade us. I am W.P. Piyasena, a mother of three children. The second one, Lalith was in Peradeniya University. Ranjith was my youngest son, married with two children, then. He worked in a garment factory. But today, I have my eldest son. Only. Both our younger sons were taken away from us. Lalith was the president of the Socialist Students' Union on the Peradeniya campus, affiliated with JVP. So the police came to our house in searching for Lalith, several times. After Police started visiting our house Lalith never came home. On December 10, 1989, when we were at a relative's house, The Police crashed into our relative’s house and was asking about Lalith. Then they took my husband away in a white van, demanding to produce Lalith. Two days later, the younger son Ranjith was also taken away by the police, by force. He was also taken to the Colombo police station where my husband was also being held. They were kept in separate rooms. At that time, Ranjith was 28 years old. My second son, Lalith, was 30 years old when he disappeared. Lalith did not come home after visits by the police. We still do not know what happened to him. On January 2, 1990, my husband was released from police custody, but Ranjith was not. My husband went to the police several times and inquired about my son, Ranjith. All that time, the police promised my husband that they would send my son home after questioning him. But Ranjith never came back. Until today, we don't know what happened to our two sons. If they were killed, why? By whom and for what reason? They are still unanswered by anyone. After the inquiries conducted by the presidential commission in 1996, they issued two death certificates for our two sons and Rs. 25,000 each as compensation for both. After some time, I was given 500 rupees per month for several months. In 2001after the new government came into power, that allowance was also stopped. Though there was a court case about Ranjith’s disappearance. Nothing came out of it. Ranjith's two children suffered very much due to their father’s disappearances, with their mother.

மாரசிங்க ஆராய்ச்சி ருக்ஷான்

விடுபட்ட தேதி 05/09/1989
இடம் காணவில்லை மட்டக்குளியா வீட்டிலிருந்து

சுகத் வீரசிங்ஹ மற்றும் பிரதீப் வீரசிங்க

விடுபட்ட தேதி 19/09/1989
இடம் காணவில்லை பண்டாரணாயக்க மாவதை, வெயங்கொட வீட்டிலிருந்து

நான் ஆரியவதி. துரவதிஸ்டான எனது கதையை சொல்ல வேண்டியுள்ளது. எனக்கு மூன்று மகன்மாரும், இரண்டு மகள்மாரும் இருந்தார்கள். கணவருக்கு நிரந்தரமான வருமானம் இல்லை என்பதனால் நான் வீட்டுப் பணிப்பெண்ணாக ஜோர்தான் நாட்டுக்கு வேலைக்கு சென்றேன். கணவர் பிள்ளைகளை பராமரித்தார். நாங்கள் வெயங்கொட - பண்டாரநாயக்க மாவத்தையில் வசித்து வந்தோம்.
1989.09.19 இராணுவத்தினர் வீட்டுக்கு வந்து எனது மூத்த மகன் பிரதீப் வீரசிங்கவை கூப்பிட்டார்கள். அவர்கள் வந்து கூப்பிட்டவுடன், எனது மூத்த மகள் ரமணியை அழைத்து கதவை மூடிவிடச் சொல்லிவிட்டு அவர்கள் மகனை அழைத்து சென்று விட்டார்கள். கொண்டு செல்வதற்கான காரணம்இ எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று எதுவும் சொல்லாமல் உறங்கிக் கொண்டிருந்த பிள்ளையை எழுப்பி கொண்டு சென்றார்கள். இராணுவத்தினர் என்று மட்டுமே எம்மால் நினைக்கக் கூடியதாக இருந்தது.
எனது இரண்டாவது மகன் சுகத் வீரசிங்ஹ பஸ் நடத்துனராக வேலை செய்துவந்தார். பஸ்ஸில் உறங்கிக் கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் வந்து அழைத்து சென்றதாக மட்டுமே எமக்கு தெரியும். அதற்கு உதவி செய்த ஐக்கிய தேசிய கட்சியினர் என்பதனை கிராம மக்கள் அடையாளம் கண்டார்கள். எனது மகனை கொண்டு செல்வதற்கு காரணமாக இருந்த செல்லத்துரை என்பவரை சிறிது காலத்தின் பின்னர் சந்தித்த போது நேரடியாகவே கேட்டேன். அவர்களது வீடுகளுக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் செய்வது போன்று நகைச்சுவைக்காக செய்த விடயம் காரணமாக கோபத்துடன் இருந்ததாக சொன்னார். அண்ணன்மார் வேறு எந்த தவறும் செய்யவில்லை என இப்போதும் மூத்த மகள் சொல்கிறார். ஆனால் மக்கள் விடுதலை முன்னணிக்கு வேலை செய்த அண்ணன்மார் இரண்டு மகன்மாருடனும் நட்பாக இருந்ததாகவும், உதவி செய்ததாகவும், மகன்களை கொண்டு செல்ல உதவிய ஒருவரை மக்கள் விடுதலை முன்னணியினர் கொலை செய்த நாளில் அண்ணனை கொலை செய்தமைக்காக பழி தீர்த்ததாக மகளிடம் சொன்னதாக பின்னாள் ஒரு நாளில் மூத்த மகள் சொன்னார். எனவே எங்களுக்கு தெரியாமல் மகன்மார் அந்த கட்சிக்கு வேலை செய்தார்களோ தெரியாது.
1994 ஆண்டு ஒருவருக்கு தலா ரூ. 15,000 என்ற வகையில் ரூ. 30,000 இழப்பீடாக கிடைத்தது. மகிந்த ராஜபக்ஸ, வாசுதேவ போன்றவர்கள் காணாமல் போனோர் தொடர்பாக கதைத்த போதிலும், எந்த உதவியும் கிடைக்கவில்லை. 2019 ஆண்டில் நிதி ஒதுக்கப்பட்டதாக கதை வந்ததே தவிர பணம் கிடைக்கவில்லை.
இப்போது குடும்பத்தில் நானும், இரண்டு மகள்மாரும், ஒரு மகனும் மட்டுமே எஞ்சியுள்ளோம். ஆரம்ப காலத்தில் கோபத்தில் இருந்த போதும் மத நம்பிக்கையுடன் மனதை தேற்றிக்கொண்டு இருக்கிறோம். எமது மகன்மாருக்கு அநியாயம் செய்தவர்கள் செய்த வினையை அனுபவித்துள்ளார்கள். பெரிய மனிதர்கள் கூட வீதிகளில் இறந்து கிடந்தார்கள்.

சுதத் பிரசாந்தா

விடுபட்ட தேதி 06/08/1989
இடம் காணவில்லை மாத்தறை திக்வல்லயிலிருந்து

Sudath Prasantha
Our family – me, my husband, and our four children. The eldest, Sudath Prasantha, goes to my mother’s house as a habit before going to the beach every morning. He was caught by the army. I was informed that my son is in trouble and has been forcefully captured by the army. I ran towards Dickwella, Matara, where I was told that my son was beaten severely and bound to a pole before being taken away. On 1989.08.06, at about 8 in the morning, my son was arrested during a raid by a team of army soldiers. But up until today, my son has not returned.
My husband and I have searched in every possible place we could think of, but to no avail. We filed a complaint at the police station and went by every commission there was, but to no effect. We went to the military camps in Boossa, Anuradhapura, Matale, Nuwara, Hambanthota, and Ratnapura, but our son was nowhere to be found.
A few days later, my second eldest son, Dharamasiri, went to the Kottegoda temple for a Bodhi Puja (a Buddhist ritual to worship the Bodhi tree). I told Dharamsiri, “Go ahead, Maddu; I’ll come right after.”. We call Dharmasiri Maddu (an endearment for the second born of a family) at home. When I went to the temple, the monk told me not to come further, as there was an ongoing raid. My second eldest son was also forcefully captured by the army, and to this day, there is no information about him.
The next morning, I took a bus to Dickwella police station, where the army stopped the bus and told us to get off before asking it to continue. Several people came along with me to file complaints, but our complaints were not accepted by the police. When I got back home, I was told by a man that my third son, Laal Prasantha, was killed and taken away. The man had climbed a tree out of fear.
Sumanawathi,
Sudath Prasantha’s mother.

பி. ஹேமந்த அஜித் சந்திரசிறி

விடுபட்ட தேதி 12/10/1989
இடம் காணவில்லை ஹொரகொல்முல்ல வீட்டிலிருந்து

எனது மகன், ஹேமந்த சந்திரசிறி காணாமல்போகும் போது ஒரு பல்கலைக்கழக மாணவனாக இருந்தார்.
1989இ ஒக்டோபர் 12 ஆம் திகதி, எனது மகனும் எனது மனைவியும் ஹொரகொல்முல்ல எங்கள் வீட்டில் இருந்தனர். ஏனெனில் அக்காலகட்டத்தில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருந்தன. மாலை 4.30 மணியளவில் அவர்கள் தோட்ட வேலை செய்துகொண்டிருக்கையில் இரண்டு பேர் அங்கே வந்து ஒரு நபரைப் பற்றிக் கேட்டனர். முகவரியைக் கண்டுபிடிப்பதற்கு அவர்கள் மகனின் உதவியைக் கேட்டனர். மகன் அந்த முகவரி தெரியாது என கூறி அவர்களுடன் செல்ல மறுத்த போது அவர்கள் மகனைப் பலவந்தமாகக் கூட்டிச் செல்ல முற்பட்டனர். அப்போது எனது மனைவி உதவி கேட்டு அலறத் தொடங்கினார். வந்த நபர்களில் ஒருவர் அவரின் பிஸ்டலை வெளியே எடுத்துச் சத்தம் போடக்கூடாது என என் மனைவியை அச்சுறுத்தியதுடன் ஹேமந்தவை ஜீப்பின் உள்ளே தள்ளினார். அவர்கள் மகனை ஜீப்பினுள் அடைக்கும் போது, வந்தவர்கள் பல்கலைக்கழகத்தின் அவர்களுக்கு எதிரான மாணவர் சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் என மகன் சத்தம் போட்டுக் கத்தினான். மகனை விடுமாறு கேட்டு எனது மனைவி அவர்களின் பின்னே ஓடினார். அயல் வீடுகளைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் தொடர்ந்து சென்றனர். ஆனால் வீதியைத் தாண்டியிருந்த சந்திக்கு அப்பால் அவர்களைத் தொடர முடியாமல் போய்விட்டது.
இச்சம்பவம் நடக்கையில் நான் வீட்டில் இருக்கவில்லை.
இதனைக் கேள்விப்பட்டு நான் வீட்டிற்கு விரைந்து சென்று சில அயலவர்களுடன் சேர்ந்து ஹேமந்தவைத் தேட ஆரம்பித்தோம். எனது மூத்த மகன் திவுலப்பிடிய பொலிஸ் நிலையத்தில் ஒரு முறைப்பாட்டினைப் பதிவுசெய்தார். ஆனால் அவர்கள் எவ்வித விசாரணை நடத்தவில்லை. ரேஸ்கோர்ஸ், நய்வல மற்றும் பூசா போன்ற பல இராணுவ முகாம்களுக்கு நாம் விஜயம் செய்தோம். ஆனால் எல்லா இடங்களிலும் எமக்கு ஒரே பதிலே எப்போதும் கிடைத்தது. 'அந்தப் பெயரில் இங்கே ஒருவரும் இல்லை'. சடலங்களும் எரிக்கப்பட்ட உடல்களும் தொடர்ச்சியாகக் குழியொன்றில் புதைக்கப்படும் எசல்லவிற்கும் எமது உறவினர்கள் சென்றனர். ஆனால் நாம் மகனைப் பற்றிக் கேள்விப்படவுமில்லை அல்லது மகனைக் காணவுமில்லை. எவ்வாறாயினும், மகனைக் கடத்திச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஜீப்பின் உரிமையாளரை நாம் சந்தித்தோம். தனது ஜீப்பினை இராணுவச் சீருடையிலும் சிவில் உடைகளிலும் வந்த சிலர் எடுத்துச் சென்றதாகவும் பின்னர் அதனைத் திரும்பத் தந்துவிட்டதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பாட்டளி சம்பிக ரணவக்க எழுதிய கடிதமொன்று 1994 இல் எனக்கு கிடைத்தது. அதில் எனது மகன் மக்கள் விடுதலை முன்னணியுடன் இணைந்த மாணவர் இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்ததாகவும் எனது மகன் ஆரம்பத்தில் மக்கள் விடுதலை முன்னணிக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தாலும் பின்னாட்களில் கட்சியின் குறிக்கோள்களையும் நடத்தையினையும் தீவிரமாக விமர்சிப்பவராக மாறியிருந்தார் எனவும் அவர் அக்கடிதத்தில் எழுதியிருந்தார்.
எனது மகன் கடத்தப்பட்டார் எனக் கேள்விப்பட்டதும் அவரைக் கண்டுபிடிப்பதற்குத் தான் விரும்பியதாகச் சம்பிக அக்கடிதத்தில் எழுதியிருந்தார். மகன் கடத்தப்பட்ட செய்தியினைக் கேள்விப்பட்ட அடுத்த நாள் மகனைப் பற்றி விசாரிப்பதற்காகக் கொழும்பில் ஒரு பௌத்த துறவியினைச் சந்தித்த பின்னர் தானும் கடத்தப்பட்டதாகவும் பின்னர் சித்திரவதைக் கூடமாகப் பயன்படுத்தப்பட்ட கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தான் நீண்ட காலம் வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் எழுதியிருந்தார். ஒரு நாள் ஹேமந்த மற்றொரு தடுத்துவைக்கப்பட்டிருப்பவரை அழைக்கும் அவரின் குரலைத் தான் செவிமடுத்ததாகவும் ஆனால் தனது கண்கள் கட்டப்பட்டிருந்ததால் தன்னால் ஹேமந்தவைக் கண்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும் சம்பிக எழுதியிருந்தார். அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் இயக்கத்தின் தலைவரான சரத் விஜேவர்தனவும் தடுத்துவைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோரில் ஒருவராக இருந்ததாகவும் அந்த முகாமில் வைத்து விஜேவர்தனவின் கண்களின் முன்னாலேயே ஹேமந்தவின் கழுத்து வெட்டப்பட்டதாக விஜேவர்தன தன்னிடம் கூறியதாகவும் சம்பிக எழுதியிருந்தார்.
எவ்வாறாயினும், நானும் எனது கணவரும் எமது நம்பிக்கையினைத் தளர விடவில்லை. கிளர்ச்சிக் காலம் முடிவடைந்த பின்னர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இருந்து காணமல்போனவர்களுக்காகக் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் நாம் கலந்துகொண்டோம். பல்கலைக்கழகத்தில் இருந்து காணமால்போனவர்களின் பட்டியலில் எமது மகனின் புகைப்படமும் இருப்பதைக் கண்டு நாங்கள் இருவருமே மயங்கிச் சரிந்துவிட்டோம்.. எனது மனைவியை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்று இரண்டு மணித்தியாலங்களின் பின்பே அவரைக் கூட்டிவந்ததால் அங்கே வந்திருந்த சம்பிகவினைச் சந்திக்கும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கவில்லை.
சித்திரவதை முகாமில் எமது மகன் இருந்த காலப்பகுதி பற்றி எமக்கு அதிக தகவல்களை வழங்கியிருக்கக்கூடிய நபர்களை எம்மால் ஒருபோதும் சந்திக்கக் கிடைக்கவில்லை. எனவே, எமது மகன் படுகொலை செய்யப்பட்டார் என்பதை நம்புவதற்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். சம்பவம் நடைபெற்றதில் இருந்து, எமது கேள்விகளுக்கு பதிலளிக்க சகல அரசாங்கங்களும் தவறிவிட்டன. எமது மகனைக் கொன்றது அல்லது காணமலாக்கியது யார்? வெறும் 26 வயதேயான எமது மகனை அவர்கள் ஏன் கொன்றார்கள் அல்லது காணமலாக்கினார்கள்?

வாக்குமூலம் வழங்கியவர் பி. கரோலிஸ் சில்வா, ஹேமந்த சந்திரசிரியின் தந்தை

நிமல் பத்மசிறி

விடுபட்ட தேதி 19/01/1990
இடம் காணவில்லை கண்டி

சுனில் ஜயலத்

விடுபட்ட தேதி 13/01/1990
இடம் காணவில்லை கெலிஓய கொடபொல வீட்டில்

நான் கொன்ஷி சசேன் ஜயலத். சுனிமல் ஜயலத்தின் அக்கா. அவர் எனது ஐந்தாவது தம்பி. சாதாரண தரத்தின் பின்னர் சிறிய வியாபாரம் செய்ய ஆரம்பித்தார். எனது தந்தை ஆயுர்வேத மருத்துவர். நான் மட்டுமே குடும்பத்தில் இருந்த ஒரேயொரு பெண் பிள்ளை. அந்த காலத்தில் எமக்கு எந்தவொரு பிரச்சினையும் இருக்கவில்லை. மிகவும் சாதாரணமாக கெலிஓய- கொடபொல கிராமத்தில் வாழ்ந்து வந்தோம்.

1989/1990 காலம் மிகவும் பயங்கரமான காலமாகும். இளம் பிள்ளைகள் துண்டுகளாக வெட்டி கொலை செய்து வீதியோரங்களில் போடப்பட்டிருந்ததை பஸ்ஸில் போகும் போது நான் கண்டுள்ளேன். 1990.01.13 திகதியிலிருந்து எமது வீடும் அப்படியே திடீரென்று மாற்றமடைந்தது. பன்னிரண்டாம் திகதி இரவு 12 மணியளவில் பேராதனை பொலீஸார் எமது வீட்டுக்கு வந்தார்கள். அவர்களுடன் வந்த கிராமத்தில் இருந்த இருவரை அறிந்து கொண்டோம். தம்பியுடன் இருந்த தம்பியிடம் உதவி பெற்ற ஒருவர் அதிலிருந்தார். வீட்டுக்குள் வந்து வீட்டிலுள்ள அனைவரையும் வந்து அமருமாறு சொன்னார்கள். அப்போது தம்பி வந்து அமர தயாராகும் போது அவரை கைகளால் பிடித்துக்கொண்டு சென்றார்கள். தம்பி தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது.
அந்த காலத்தில் இவை தொடர்பாக சொல்வதற்கும் நாம் சொல்லும் விடயங்களை கேட்பதற்கும் எவரும் இருக்கவில்லை. அந்த கவலையில் எமது தாயும், தந்தையும் மரணமடைந்தார்கள். நான் மிகவும் சிரமமப்பட்டு மனதை தேற்றிக் கொண்டேன். தம்பிக்காக செய்வதற்கு எதுவுமில்லை என்பதனால் எனது நண்பியான ஜயந்தி தந்தெனிய என்பவருடன் இணைந்து காணாமல் போனோருக்காக கதைப்பதற்கு நாம் ஒன்றிணைந்துள்ளோம். தமது குடும்பத்தில் ஒருவரை இழந்தவர்கள் தவிர இவ்வாறு கதைக்கும் எவரையும் நான் காணவில்லை. காணாமல் போனோரின் கிராமங்களில் உள்ளவர்கள் பிக்குகள், பாதிரியார் போன்ற எவரும் கதைக்கவில்லை. இருப்பினும் ஜனாதிபதி சந்திரிக்காவின் காலத்தில் 1994 ஆம் ஆண்டு மரணச் சான்றிதழுடன் ரூ. 25,000 இழப்பீட்டு பணம் கிடைத்தது. தம்பி இறந்துவிட்டார் என்று நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது ? அதனை நாம் காணவில்லையே ?

தர்மசிறி பிரசாந்த

விடுபட்ட தேதி 08/08/1989
இடம் காணவில்லை Dikwella kottegoda temple

Dharmasiri Prasantha
Our family – me, my husband, and our four children. The eldest, Sudath Prasantha, goes to my mother’s house as a habit before going to the beach every morning. He was caught by the army. I was informed that my son is in trouble and has been forcefully captured by the army. I ran towards Dickwella, Matara, where I was told that my son was beaten severely and bound to a pole before being taken away. On 1989.08.06, at about 8 in the morning, my son was arrested during a raid by a team of army soldiers. But up until today, my son has not returned.
My husband and I have searched in every possible place we could think of, but to no avail. We filed a complaint at the police station and went by every commission there was, but to no effect. We went to the military camps in Boossa, Anuradhapura, Matale, Nuwara, Hambanthota, and Ratnapura, but our son was nowhere to be found.
A few days later, my second eldest son, Dharamasiri, went to the Kottegoda temple for a Bodhi Puja (a Buddhist ritual to worship the Bodhi tree). I told Dharamsiri, “Go ahead, Maddu; I’ll come right after.”. We call Dharmasiri Maddu (an endearment for the second born of a family) at home. When I went to the temple, the monk told me not to come further, as there was an ongoing raid. My second eldest son was also forcefully captured by the army, and to this day, there is no information about him.
The next morning, I took a bus to Dickwella police station, where the army stopped the bus and told us to get off before asking it to continue. Several people came along with me to file complaints, but our complaints were not accepted by the police. When I got back home, I was told by a man that my third son, Laal Prasantha, was killed and taken away. The man had climbed a tree out of fear.
Sumanawathi,
Dharmasiri Prasantha’s mother.

Lal Prasantha

விடுபட்ட தேதி 08/08/1989
இடம் காணவில்லை Dikwella

Laal Prasantha
Our family – me, my husband, and our four children. The eldest, Sudath Prasantha, goes to my mother’s house as a habit before going to the beach every morning. He was caught by the army. I was informed that my son is in trouble and has been forcefully captured by the army. I ran towards Dickwella, Matara, where I was told that my son was beaten severely and bound to a pole before being taken away. On 1989.08.06, at about 8 in the morning, my son was arrested during a raid by a team of army soldiers. But up until today, my son has not returned.
My husband and I have searched in every possible place we could think of, but to no avail. We filed a complaint at the police station and went by every commission there was, but to no effect. We went to the military camps in Boossa, Anuradhapura, Matale, Nuwara, Hambanthota, and Ratnapura, but our son was nowhere to be found.
A few days later, my second eldest son, Dharamasiri, went to the Kottegoda temple for a Bodhi Puja (a Buddhist ritual to worship the Bodhi tree). I told Dharamsiri, “Go ahead, Maddu; I’ll come right after.”. We call Dharmasiri Maddu (an endearment for the second born of a family) at home. When I went to the temple, the monk told me not to come further, as there was an ongoing raid. My second eldest son was also forcefully captured by the army, and to this day, there is no information about him.
The next morning, I took a bus to Dickwella police station, where the army stopped the bus and told us to get off before asking it to continue. Several people came along with me to file complaints, but our complaints were not accepted by the police. When I got back home, I was told by a man that my third son, Laal Prasantha, was killed and taken away. The man had climbed a tree out of fear.
Sumanawathi, Laal Prasantha’s mother.

ஜயரத்ன சேனாநாயக்க

விடுபட்ட தேதி 20/11/1989
இடம் காணவில்லை பேராதனை பொலிஸூக்கு அருகாமை பிரதான வீதியில்

ஜயரத்ன சேனாநாயக்க என்பவர் என்னுடைய கணவர். அவரும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். எம் இருவரினதும் வீடுகள் அருகருகே காணப்பட்டமையால் நாம் மிகவும் நெருக்கமானோம். அதனால் நாம் காதலர்களாகி திருமணம் முடித்து சந்தோசமாக வாழ்ந்தோம். திருமண வாழ்க்கையில் எனக்கொரு மகனும் மகளும் கிடைத்தார்கள். எனது கணவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் தொழில் செய்து வந்தார்.அதன்காரணமாக எமக்கு மெனிக்கின்னயிலிருந்து பேராதனைக்கு வர நேர்ந்தது. கணவரின் தொழில் காரணமாக உத்தியோகப்பூர்வ வீடொன்றும் எமக்கு கிடைத்தது.
ஒரு நாள் பேராதனை பொலிஸிலிருந்து எமது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் எனது கணவர் மக்கள் விடுதலை முன்னணியுடன் தொடர்புடையதால் அவரைத் தேடுகின்றோம் என்றனர். அப்போது கணவர் வீட்டில் இருக்கவில்லை என தெரிவித்து பொலிஸார் சென்று விட்டனர்.
மாலை கணவர் வந்தவுடன் அதுபற்றி கணவரிடம் கூறினேன். அதற்கு மறுநாள் அவர் பேராதனை பொலிஸ் நிலையத்துக்குச் சென்றார். பேராதனை பொலிஸுக்கு சென்ற அவரை திரும்ப அனுப்பவில்லை. இதனால் நான் பேராதனை பொலிஸுக்கு சென்றேன். அங்கு நின்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் என்னுடைய கணவரை வெளியே விடமுடியாது என தெரிவித்தனர்.சாப்பாடு ஒன்றை வாங்கி வந்து கொடுக்க மாத்திரமே எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.சரியாக கதைக்க கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. அவர் பொலிஸ் தடுப்பில் 19 நாட்கள் இருந்தார். 20ஆவது நாள் அவரை விடுவிப்பதாகத் தெரிவித்ததால் அவரைக் கூட்டி வர பொலிஸுக்கு சென்றேன்.அவரை விடுவித்ததும் அவருடன் வீதியைக் கடந்து 50 மீற்றர் தூரம் செல்லும் போது வெள்ளை நிற வேனில் வந்து 1989.11.20ஆம் திகதி கடத்திச் சென்றனர். நான் அப்போது பொலிஸுக்கு சென்று விடயத்தைக் கூறிய போது எம்மால் ஒன்றும் செய்ய முடியாது நாங்கள் அவரை விடுவித்துவிட்டோம் என்று கூறினர்.
நான் கணவரைத் தேடுவதற்காக கணவரின் தந்தையுடன் புஸ்ஸ முகாமுக்குச் சென்றேன். இலங்கையில் செல்லக்கூடிய அனைத்து இடங்களுக்கும் சென்றேன். ஜோதிடம் பார்த்தேன். ஆனால் எதிலும் எதிர்பார்த்தது மாத்திரம் கிடைக்கவில்லை. கணவரின் மரணச் சான்றிதழுடன் எனக்கு நட்டஈடாக 20,000 ரூபாய் மாத்திரமே கிடைத்தது.
வாக்குமூலம் ஜயரத்ன சேனாநாயக்கவின் மனைவி

சமந்த கல்யாண

விடுபட்ட தேதி 09/10/1989
இடம் காணவில்லை திவுலப்பிட்டிய பொலிஸிலிருந்து

ஒரு தனித்த ஒற்றைத் தாயாக தற்கொலை செய்து கொண்ட எனது கணவரின் ஓய்வூதியத்தை நம்பி எனது வாழ்வாதாரத்தை நடத்திக்கொண்டு எனது இரு குழந்தைகளையும் வளர்த்து வந்தேன். 1989 ஒக்டோபர் 09 ஆம் திகதி எனது மகளின் பதின்மூன்றாவது பிறந்தநாள். அன்றைய தினம் எனது பிள்ளைகளின் நண்பர்கள் அனேகர் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக எனது வீட்டிற்கு வந்திருந்தனர். எவ்வாறாயினும் அன்றைய இரவு எனது மகன் காணாமலாக்கப்பட்டிருந்தார்.

சிவில் உடையணிந்த பத்துப்பேர் அடங்கிய குழுவொன்று பொலிசாரின் உதவியுடன் வந்து எமது வீட்டை உடைத்து எம்மீது அவர்களின் துப்பாக்கிகளை நீட்டினர். அவர்கள் எனது மகனிடம் கேள்விகளைக் கேட்டு அவரது ஆடைகளை பலவந்தமாக அகற்றி சோதனையிட்டனர். அத்தோடு அவர்கள் எனது மகனிடம் எமது குடும்பத்தை பற்றியும் விசாரித்தனர். ஏன் மகனை விசாரிக்கிறீர்கள் என அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொண்;டு எனது மகனை திருப்பியனுப்புவதாகவும் உறுதியளித்தனர். என்னுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே எனது மகனை எமது வீட்டிற்கு பின்னால் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தினுள் இழுத்துச் சென்று ஏற்றியதைக் கண்டேன். . அத்தோடு அவர்கள் எனது மகனின் கண்களைக் கட்டி அவரது இரு கைகளையும் பின்னால் இழுத்துக்கட்டி அவரை அழைத்துச் சென்றனர்.

மறுநாள் எனது மகன் விடிந்தும் வீடு திரும்பவில்லை. எனவே நான்; திவுலப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோது அவர்கள் எனது மகனை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. இரு வாரங்களின் பின்னர் எனது மகனை கடத்திச்சென்ற சிலரை நான் திவுலப்பிட்டிய சந்தியில் அடையாளம் கண்டேன். அச்சந்தர்ப்பத்தில் மிகவும் பயந்தேன்.

ஒவ்வொரு முறையும் நான் பொலிஸ் நிலையத்திற்கு செல்லும்போதும் அவர்கள் எனது மகன் உயிருடன் இருப்பதாகவும் மகனை அவர்கள் மீண்டும் அனுப்புவதாகவும் உறுதியளித்தனர். மகன் காணாமல் போனமைத் தொடர்பில் முறைப்பாடு செய்ய எனக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை. அத்துடன் அன்றைய ஜனாதிபதியாக இருந்த ஆர்.பிரேமதாசவையும் செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமைக்கு பொறுப்பான ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களையும் சந்தித்தேன். அது மட்டுமன்றி எனது மகனைத் தேடி பல முகாம்களுக்கு அலைந்தேன். ஆனாலும் அவர் எங்கேயும் இருக்கவில்லை. அவர் காற்றோடு காற்றாக மறைக்கப்பட்டார்.

இறுதியில் எனக்கு மரணச் சான்றிதழும் பதினைந்தாயிரம் ரூபாய் பணமும் மாத்திரமே கிடைத்தது. எனது மகனின் உயிருக்கான பெறுமதி வெறும் பதினைந்தாயிரம் தானா? எனது மகனுக்கு என்ன நடந்தது? ஏன் இந்த அரசாங்கம் இவ்வாறான வன்முறைகள் இடம்பெற வழிசமைத்தது?

வாக்குமூலம் வழங்கியவர்; சமந்தா கல்யாணவின் தாயார் நளினி உபமாலிகா

கபில பந்துல

விடுபட்ட தேதி 17/09/1989
இடம் காணவில்லை மஹரகம விஜேராமையிலிருந்து

b. Kapila Bandhula
We lived very happily at our home town in Nugegoda. At that time, there was a great terror in the country due to the 1988-89 insurrection. There was trouble everywhere. But we lived quite happily. My family included me, two elder sisters, younger brother, my mother, and my father.

My younger brother, Kapila Bandhula had taken his Advanced Level exams and was awaiting the results in 1989. He was exceptionally intelligent from an early age. For instance, he did not take any further tutoring for his ordinary-level examinations. He was a responsible person. In April 1989, when our house was being repainted, he told everyone that he would pay for all painting charges next year. He was someone who cared deeply about his family. He was popular and well liked among neighbours and even children. He even played with those children, and they liked him a lot.

It was a Sunday, September 17, 1989, and my brother was home. Suddenly, a friend of his arrived and took my brother with him. Usually, his friends come to visit him frequently. It was also normal on that particular day. My brother went with his friend. He did not come until that evening. Later, we got to know that my brother was kidnapped. We do not believe that my brother is related to or involved in anything. But this happened because of the person who accompanied my brother.

My brother was the pillar of strength of our family. His disappearance put a lot of pressure on us. My mother searched for him everywhere. Boossa, Matara, Anuradhapura, Colombo, every military camp, and every place she could go to. My mother visited psychics and other auspicious places and prayed. Problems began to arise in our household as my mother searched for my brother despite the fact that she was constantly away from home. But one day, one of the psychic places my mother visited to find clues about my brother's whereabouts, told her that Bandhula had passed away. It was only after 5 years that our mother stopped looking for him after giving alms.
After that, my mother grew sick. My sister also got sick, and my father passed away. My mother's illness worsened after my father's illness grew. I had to quit my job because there was no one to take care of my mother and sister. We didn't even go to see my younger brother's advanced-level examination results. He had applied for a job. We received the job offer letter after his disappearance. We received 15000 rupees in restitution during a restitution program held at the Bandaranaike Memorial International Conference Hall. But is my younger brother worth only 15,000 rupees?

Maala Jayakodi,
Sister (third eldest) of Kapila Bandhula 

அனுர பிரியதர்ஷன

விடுபட்ட தேதி 19/11/1989
இடம் காணவில்லை மாகலேகொட, வெயங்கொட வீட்டிலிருந்து

எனது பெயர் லீலாவதி. எனக்கு ஒரேயொரு தம்பி இருந்தார். குறைகள் எதுவுமின்றி வாழ்ந்து 22 வயதில் திருமணம் செய்து நான்கு பிள்ளைகளை பெற்று வெயங்கொட - மஹலேகொட பகுதியில் இருந்த காணியில் வீடு கட்டி, கடை நடத்தி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன். மூத்த மகனுக்கு 20 வயதாகும் வரை எமக்கு கூறுமளவுக்கு குறைகள் எதுவும் இருக்கவில்லை. எமது உழைப்பில் வேலை செய்து சம்பாதித்து பிள்ளைகளை படிப்பித்து மகிழ்ச்சியாக வாழ்ந்தோம்.
1989.11.19 ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு வெயங்கொட பொலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கவிரத்ன கான்ஸ்டபிளும் கிராம சேவகரான காமினி கொரயா ஆகியோர் வந்து மகன் அனுர பிரியதர்ஷனவை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள். மகன் செய்த தவறு அல்லது வேறு காரணம் தொடர்பில் எமக்கு சொல்லவில்லை. அந்த நாட்களில் நாடு முழுவதும் ஆண் பிள்ளைகளை கொண்டு செல்வதாக பெரிதாக கதைக்கப்பட்டது. எமது பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கட்சிக்கு வேலை செய்த வீடுகளிலிருந்த பிள்ளைகள் அவ்வாறு அழைத்து சென்றனர். அப்போது ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் இருந்தது. பொலீஸ் நிலையங்களில் இருந்தவர்கள் சட்டத்துக்கு அமைய வேலை செய்யவில்லை. அதிலிருந்து சிறிது காலத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா கட்சியிலிருந்து விலகியதாக வீட்டின் முன்னால் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என கணவரிடம் சொல்லப்பட்டது. அவ்வாறான அச்சுறுத்தல் கிடைத்த சில வீடுகளில் சுவரொட்டி ஒட்டினார்கள். சிலர் அவ்வாறு செய்யவில்லை. நாங்களும் சுவரொட்டி ஒட்டவில்லை. அந்த காரணத்தைத் தவிர எம் மீது கோபப்படுவதற்கு இவ்வாறான அநியாயம் செய்வதற்கு வேறெந்த காரணமும் இருக்கவில்லை.
மகன் வீட்டுக்கு வரவில்லை என்பதனால் நான் வெயாங்கொட பொலீஸ் நிலையத்துக்கு சென்று விபரங்களை தெரிவித்து முறைப்பாடு செய்ய வேண்டும் என சொன்னேன். பொலீஸார் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லை. பிள்ளையை கொண்டு சென்ற பின்னர் கணவரது மனநிலை அவ்வளவு நன்றாக இருக்கவில்லை என்பது தெரிந்தது. அதன் காரணமாக அடுத்த நாள் கம்பஹா பொலீஸ் நிலையத்துக்கு சென்றேன். கேட்டுக் கொண்டிருக்க முடியாதளவு மோசமான வகையில் என்னைத் திட்டி பொலீஸ் நிலையத்திலிருந்து விரட்டினார்கள். முறைப்பாட்டை எழுதவில்லை. மகனுக்காக செய்வதற்கு, அவரை கண்டுபிடிப்பதற்கு அந்த வேளையில் எம்மால் எதனையும் செய்ய முடியவில்லை. மகிந்த ராஜபக்ஸ மவ் பெரமுண எனும் இயக்கத்தை உருவாக்கி கதிர்காமத்துக்கு சென்ற பாதயாத்திரையில் நானும் கலந்து கொண்டேன். பல ஆண்டுகளுக்கு பின்னர் 1994 ஆம் ஆண்டு மகனுக்கு என்று ரூ. 15,000 இழப்பீடு கிடைத்தது. இரத்தத்தை பாலாக்கி ஊட்டி வளர்த்த ஒரு தாய்க்கு பிள்ளைக்கான விலையை எப்படியும் கொடுக்க முடியாது.

பர்னால்டு துசித

விடுபட்ட தேதி 23/09/1989
இடம் காணவில்லை வனாத்தமுல்லை

விமல்சிறி மற்றும் வசந்த

விடுபட்ட தேதி 27/07/1989
இடம் காணவில்லை மாத்தறை திக்வல்லயிலிருந்து

காமினி சுகதசிறி

விடுபட்ட தேதி 28/10/1989
இடம் காணவில்லை ஹூனுமுல்ல இராணுவ முகாமிலிருந்து

எனது மகன் காமினி மின்சார வேலைகளில் மிகவும் விருப்பம் கொண்டிருந்ததுடன் ஒரு மின்னியலாளராக வருவதே அவரின் கனவாக இருந்தது. அவர் கல்வி கற்கும் போதே பகுதி நேர மின்னியலாளராகப் பணியாற்ற ஆரம்பித்தார். 1989 ஆம் ஆண்டு அவர் வெறும் இருபது வயதே நிரம்பிய இளைஞராக இருந்தார். ஓக்டோபர் 28 ஆம் திகதி அவர் தனது நண்பர்களில் ஒருவருடன் வீட்டுக்கு வரும் போது தான் இச்சம்பவம் நடைபெற்றது.
மதியம் 12 மணியிருக்கும். எங்கள் வீட்டில் இருந்து 500 மீற்றர்கள் தூரத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் வீதியை மறித்திருந்தனர். இதைக் கேள்விபட்டதும் நாம் அங்கு சென்றோம். அங்கு சனக்கூட்டமாக இருந்தது. அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தங்களின் முகத்தினை முகமூடிகளாலும் துணிகளாலும் மறைத்திருந்ததால் அவர்களை எம்மால் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை.
எனது மகனதும் ஏனைய சில இளைஞர்களதும் கண்கள் கட்டப்பட்டு அவர்கள் அருகில் இருந்த மின் கம்பத்திலும் மரங்களிலும் கட்டப்பட்டிருந்தனர். எமது மகனின் அருகில் செல்வதற்கு எம்மை அவர்கள் அனுமதிக்கவில்லை. அவ்வாறு நாம் மீறிச் சென்றால் எம்மைச் சுடுவோம் என எம்மிடம் கூறினார்கள். எனது மகனையும் ஏனைய இளைஞர்களையும் ஒரு வாகனத்தில் ஏற்றி அவர்கள் அவ்விடத்தில் இருந்து சென்றுவிட்டனர். நாம் ஒரு வேனில் அவர்களைப் பின்தொடர்ந்தோம். எமது மகன் அச்சத்தில் கத்துவது எமக்குக் கேட்டது. திடீரென வாகனம் நிறுத்தப்பட்டு எமது பிள்ளையை வெளியே இழுத்தெடுத்து அருகிலுள்ள மரத்தின் கிளையை முறித்து அவரைக் கடுமையாக அடித்தார்கள். பின்பு மகனை இன்னொரு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவர்கள் சென்றுவிட்டார்கள். நாம் அந்த வாகனத்தினையும் பின்தொடர்ந்தோம். வாகனம் ஹூனுமுல்ல இராணுவ முகாமிற்குள் சென்றது. முகாமின் வாசலில் நின்றவர்கள் எம்மை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. முகாம் வாசலில் காவலுக்கு நின்றவர்களை நாங்கள் வணங்காத குறை மட்டும் தான் பிள்ளைகளைக் கேட்டு அவர்கள் துப்பாக்கியைக் காட்டி எம்மை உடனடியாகச் செல்லுமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் நாம் எமது மகனைக் காணவேயில்லை.
நாம் உடனேயே பொலிஸ் நிலையத்திற்குச் சென்றோம். ஆனால் இரண்டு இராணுவத்தினர்களின் அறிவுறுத்தலின் பேரில் அவர்கள் எமது முறைப்பாட்டினைப் பதிவுசெய்ய மறுத்துவிட்டனர். நாம் அந்த இரு நபர்களின் முன்பாக மண்டியிட்டு எமது மகனை விடுவிக்குமாறு கெஞ்சினோம். ஜேவிபியில் (மக்கள் விடுதலை முன்னணி) சேர்வதற்கா நாம் எமது மகன்மாரை வளர்த்தோம் என அவர்களில் ஒருவர் எம்மிடம் கேட்டு என்னை உதைக்க முயற்சித்தார். ஜேவிபியுடன் எமது மகனுக்குத் தொடர்புள்ளது என்றே பொலிசாரும் இராணுவத்தினரும் குறிப்பிட்டனர். மகனுக்கு அவ்வாறான தொடர்பு ஒருபோதும் இருக்கவில்லை என்பதையே நாம் இப்போதும் கூறுகிறோம். எமது மகனைப் பற்றி விசாரிப்பதற்கு நாம் அந்தப் பொலிஸ் நிலையத்திற்குப் பின்பு ஒருபோதும் செல்லவில்லை.
செஞ்சிலுவைச் சங்கத்திடமும் பொலிஸ்மா அதிபரிடமும் இராணுவத் தளபதியிடமும் நாம் முறைப்பாடு செய்தோம். எமது மகனைக் கண்டுபிடிக்க முடியுமா எனப் பார்ப்பதற்காக நாம் பல பொலிஸ் நிலையங்களுக்கும் இராணுவ முகாம்களுக்கும் சென்றோம். மகனைப் பற்றிய தகவல் எமக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. நாம் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்த பின்னர் தான் ரூபாய் எமக்கு 25000 ரூபாய் பணமும் இறப்புச் சான்றிதழும் தந்தார்கள். சான்றிதழில்இ 'காணமால் போய் ஒரு வருடத்திற்கும் மேலாகியுள்ளதால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டதாகச் சந்தேகிக்கப்படுகின்றது' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எமக்கு மாதாந்தம் 500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. ஆனால் ஐ.தே.க 2001 ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த கொடுப்பனவு நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவங்கள் நடைபெற்று நீண்ட காலத்தின் பின்னர் எம்மைக் காண வந்த பிக்கு ஒருவர் தான் இராணுவத்தால் கடத்தப்பட்டதாகவும் தன்னை படல்கம பாலத்திற்குக் கொண்டுசென்று பாலத்தின் மீது ஏற்றி பல இளைஞர்களைச் சுட்டு ஆற்றில் தள்ளியதாகக் கூறினார். எவ்வாறாயினும், சுடப்படுவதற்கு முன்னமே தான் ஆற்றில் குதித்து நீந்தித் தப்பியதாக அந்தப் பிக்குக் கூறினார். இதன்போது என்னுடைய மகனும் அங்கிருந்ததாகவும் அவர் எமது மகனைக் கண்டதாகவும் அவர்கள் மகனைச் சுட்டு நீரில் மூழ்கடித்ததாகவும் உறுதியாகக் கூறினார். எம்மால் அந்தக் கதையினை நம்பமுடியவில்லை என்பதால் நாம் எமது மகனைத் தொடர்ந்து தேடினோம்.
திவுலப்பிட்டிய மனிதப் புதைகுழி விவகாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது எமக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர்களுள் முன்னாள் பொலிஸ் ஓஜசி நிமால் பெர்ணாண்டோ, இராணுவ மேஜர் டீன், அமைச்சர் ஆரியரத்ன ஜயதிலக்க மற்றும் பொலிஸ் உறுப்பினர் குடாஹெட்டி ஆகியோரும் ஏனைய சிலரும் உள்ளடங்கியிருந்தனர். சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நீதவான் நீதிமன்றத்தில் நிமால் பெர்ணாண்டோவைத் தவிர ஏனையவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கினை முன்னெடுத்த நீதிபதியினை இச்சம்பவத்துடன் தொடர்புடைய அடிப்படை உரிமை வழக்கின் அடிப்படையில் மாற்றிவிட்டனர். வழக்கு இறுதியில் உயர் நீதிமன்றுக்குக் கொண்டுசெல்லப்பட்டது. எவ்வாறாயினும், ஐதேக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவார்கள் என்ற பயத்தில் நாம் அதில் பங்குபற்றவில்லை.
அக்காலகட்டத்தில் எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எனது கணவர் ஆதரவு வழங்கியதாலேயே எனது மகன் கடத்தப்பட்டார் என நான் சந்தேகிக்கின்றேன். பிரதேசத்தில் உள்ள ஐதேக அமைப்பாளர் ஒருவரின் வேண்டுகோளின் பேரில் எமது மகனைக் காணமலாக்குமாறு அமைச்சர் விஜேபால மெண்டிஸ் பொலிசுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருக்கலாம் என நான் நினைக்கிறேன்.

வாக்குமூலம் வழங்கியவர்: திருமதி எம். பி. லீலாவதி, காமினி சுகதசிறியின் தாய்

லிச்சோவி நிசான்ந்த வீரசிங்க

விடுபட்ட தேதி 16/11/1989
இடம் காணவில்லை வத்தேகம மத்திய மஹா வித்தியாலயத்தித்தின் அருகில்

1989 இல் தென்னிலங்கையில் பாடசாலை மாணவர்கள் கிராம புற பாடசாலைகளின் கல்வி தரம் கொழும்பு மாநகரம் போன்று அமையாததற்காக வீதிகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர்.
1989.11.16 இல் எனது மகனின் பாடசாலையில் ஓர் சம்பவம் நடந்தது. அவன் கிழிந்த பாடசாலை சீருடையுடன் வீடு திரும்பினான். நான் அவனிடம் மறு நாள் பாடசாலை செல்ல வேண்டாம் என்று கூறினேன். ஆனால் அவனோ மறு நாள் பாடசாலை சென்றான்.
வழமையாக எனது மகன் இரண்டு மணிக்கு பாடசாலையில் இருந்து வீடு திரும்புவான். ஆனால் அன்று அவன் வீடு திரும்பவில்லை.எனது மகன் வத்தேகம மத்திய மஹா வித்தியாலயத்தித்தின் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செம்மஞ்சல் நிற வாகனத்தில் வந்த பொலிஸ் குழுவினரால் கடத்திச் செல்லப்பட்டதாக அறிய வந்தேன்
அதன்பின் நான் பொலிஸ் நிலையத்துக்கு உடனடியாக சென்ற போது அங்கு செம்மஞ்சள் வாகனத்தை கண்டேன். ஆனால் பொலிஸார் எனது மகன் அங்கு இல்லை என்றனர். எனது கணவர் வீடு திரும்பிய போது சம்பவத்தை அறிந்து நாம் மீண்டும் ஒன்றாக பொலிஸ் நிலையம் சென்றோம். நாம் உட் செல்ல தடை விதிக்கப் பட்டது. ஏனெனில் உட்செல்லல் தடுக்கப்பட்டு இருந்தது.அத்துடன் எமது முறைப்பாட்டை ஏற்க மறுத்தனர். அந்த வளாகத்தில் நிற்க அனுமதிக்கப் படவில்லை. தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றப்பட்டோம்.
டிசெம்பர் 5ஆம் திகதி உதவி பொலிஸ் அத்தியட்சர் (எ.ஸ்.பி) இன் அனுமதியுடன் ஒரு முறைப்பாட்டை தாக்கல் செய்தோம். சார்ஜன்ட் லொக்கு பண்டா எனது முறைப்பாட்டை பொலிஸ் பதிவு புத்தகத்தில் பதியாது ஒரு வெற்று தாளில் எழுதினார். நான் இதை பற்றி கேள்வி கேட்ட போது அவர் என்னை திட்டி மேலதிக கேள்விகள் கேட்க கூடாது என கண்டித்தார். நான் வீடு சென்று எனது நாட் குறிப்பில் இவற்றை பதிவு செய்தேன்.
பின்னர் ஒரு வாகன சாரதி மாணவர்கள் சிலரை பொலிஸ் நிலையத்திலிருந்து பள்ளேகளை முகாமுக்கு அழைத்து சென்றதாக கூறினார். எனது மகனை மற்ற பிள்ளைகள் மத்தியில் கண்டதாக கூறினார். நாங்கள் பள்ளேகளை முகாமுக்கு சென்றோம். ஆனால் அங்கு அதிகாரிகள் குறிப்பிட்ட பெயருடைய நபர் இங்கு இல்லை என எம்மை உட் பிரவேசிக்க அனுமதிக்க இல்லை. நாம் வேறு பல முகாம்களுக்கு சென்றோம். எந்த பலனும் கிடைக்க இல்லை.
நான் ஜனாதிபதி ஆணை குழுவை தொடர்பு கொண்ட போது பொலிஸ் முறைப்பாட்டு பதிவை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப் பட்டேன். நான் அதை பெற்றுக் கொள்ள முயற்சித்த போது அவர்கள் முறைப்பாட்டை பதியவில்லை என அறிந்து கொண்டேன். ஐந்து வருடங்களின் பின் நாட் குறிப்பை கண்டு பிடித்து முதல் முறையாக பொலிஸ் பதிவு புத்தகத்தில் முறைப்பாடு பதியப்பட்டது.
சில மாதங்களின் பின் எனது கிராமத்தை சேர்ந்த பிரியந்த சோமசிறி என்ற நபர் என் மகனின் கடத்தலுக்கு துணை புரிந்ததாக கோபத்துடன் கூறினார். அவர் அவ் வேளையில் போதையில் இருந்ததுடன் அவர் கால்களில் என் மகனின் சப்பாத்தும் இருந்தது. நான் இவரை குறித்து முறைப்பாடு செய்யவில்லை. ஆவரால் எனது ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்தேன். இந்த காணாமல் போன சம்பவம் எனது மற்ற பிள்ளைகளின் படிப்பை பாதித்தது.
நான் பொதுஜன முன்னணியை ஆதரித்ததால் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவர்கள் எனது வீட்டை அழித்தனர். எனது மகனை காணாமல் ஆக்கி ஐக்கிய தேசிய கட்சி என்னை பழிவாங்கி உள்ளனர். நாங்கள் ஜனாதிபதி ஆணை குழுவிடம் இருந்து 15இ000 ரூபாய் பெற்று கொண்டோம். நான் அந்த பணத்தை புத்தர் சிலையை நிர்மாணிக்க பயன் படுத்தினேன். நான் எனது மகனை மட்டும் தொலைக்கவில்லை. அவனது சப்பாத்து சோடிகளையும் தொலைத்துள்ளேன்.

வாக்குமூலம் - கண்ணொறுவ கெதர சீலாவதி- நிசானந்த வீரசிங்கவின் தாய்

பியல் புஷ்ப குமார

விடுபட்ட தேதி 20/11/1989
இடம் காணவில்லை களுத்துறை, பயாகல வீட்டிலிருந்து

மைக்கேல் எட்வர்ட்

விடுபட்ட தேதி 04/09/1989
இடம் காணவில்லை R. B. 18 - மாளிகாவத்தை வீட்டிலிருந்து

கிரம்பே கெதர சமரசிங்க

விடுபட்ட தேதி 09/10/1989
இடம் காணவில்லை பல்லேகல இராணுவ முகாமிலிருந்து

"எனது கணவர் மரப்பலகை விநியோக ஒப்பந்தக்காரர். ஜேவிபி இயக்கத்துடன் 1971 ஆண்டில் தொடர்பில் இருந்தாலும் 1989இல் அந்த தொடர்பு இருக்கவில்லை.
1989.10.9 ஆம் திகதி காலை 6.30 மணியளவில் இராணுவ ஜீப் இலக்க தகடு இன்றி எமது வீட்டின் முன் வந்து நின்றது. அந்த வாகனத்துக்குள் எனது கணவரின் நண்பர் ஒருவரும் இருந்தார். அவர்கள் சமரசிங்கவை பற்றி விசாரித்துவிட்டு வீட்டை சோதனை செய்தனர். அப்போது எனது கணவர் கடைக்குச் சென்றிருந்தார். அவர்கள் எனது கணவரின் சகோதரன் ராஜகருணவை எனது கணவரை தேடி கண்டுபிடிக்க ஜீப்பில் அழைத்து சென்றனர். பின்னர் எனது கணவரை அவர்கள் கண்டுபிடித்தவுடன் அவர்கள் எனது மைத்துனரை வீதியில் இறக்கிவிட்டு சென்றனர் என எனது மைத்துனர் கூறினார்.
நாங்கள் உடனடியாக வத்தேகம பொலிஸ் நிலையத்துக்கு சென்றோம். அங்கே எனது கணவர் இருக்கவில்லை. நாங்கள் இரு மணித்தியாலம் அந்த ஜீப் பொலிஸ் நிலையத்துக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். எனது நண்பி சித்திரா அந்த ஜீப் கண்டி இராணுவ முகாம் நோக்கி பயணித்ததை கண்டதாக தகவல் தந்தார். அவளது கணவர் எனது கணவருக்கு யாரோ மதிய உணவு பொதி கொடுத்ததை பார்த்ததாக தெரிவித்தார். நான் இராணுவ முகாமுக்கு சென்று இராணுவ பொறுப்பதிகாரியை சந்திக்க விண்ணப்பம் கோரினேன். ஆனால் பலன் இல்லை. இராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கடையில் சாதாரண உடையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு இராணுவ சிப்பாய் இராணுவ அதிகாரியின் கட்டளையின் பேரில் எனது கணவரை தான் கூட்டி சென்றதாக. பரிதாபத்துடன் கூறினார்.
பின்னர் எனது கணவர் பல்லேகல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டதாக நான் அறிந்தேன். நான் பல தடவை அந்த முகாமுக்கு சென்றேன். ஆனால் என் கணவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நான் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அது சரியான முறையில் எழுதப்பட்டதா என தெரியவில்லை. நான் எனது கணவரை குறித்தான தகவலை பெற அமைச்சர் லக்க்ஷ்மன் கிரியல்ல ஊடாக மேஜர் மென்டிஸ் என்ற இராணுவ அதிகாரிக்கு கடிதமொன்றை கொண்டு சென்றேன். ஆனால் அதிகாரியை சந்திக்கக் கூட முடியவில்லை.
அவ்வாறு சென்ற ஒரு நாள் 'எனது கணவர் இராணுவத்தை தாக்க முயற்சித்ததால் அவரை அவர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர்'. என அங்கிருந்த ஒருவர் கூறினார். நான் சட்டத்தரணியுடன் அங்கு சென்றபோது அவரை விடுவிக்க காலம் எடுக்கும் என கூறப்பட்டது.
எனது கணவர் சில்வஸ்டர் இராணுவ முகாமில் இருந்த போது அங்கு எனது கணவரை சந்தித்ததாக நண்பர் ஒருவர் கூறினார்.
நான் மூன்று மாதம் அவரை தேடினேன். ஆனால் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
எனது கணவர் ஜேவிபி இயக்கத்தின் ஆதரவாளர் ஆனால் ஒரு போதும் ஜேவிபி இயக்கத்துடன் இணைந்து செயற்படவில்லை. இந்த காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் விஜயசிரியினால் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல் செயல் என நான் நம்புகிறேன். ஏனெனில் எனது கணவர் சுதந்திர கட்சியின் ரத்வத்தையை ஆதரித்ததது இதற்கு காரணம்.
அந்தக் காலப்பகுதியில் மத்திய மாகாணத்தை சேர்ந்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உடுகம்பொல இந்த காணாமல் போன சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்டார் என எனக்கு தெரியவந்தது. கொலை செய்யப்படவேண்டியோரின் பட்டியல் அவரிடம் இருந்தததாகவும் அத்துடன் பச்சைப்புலிகளை அந் நேரம் கண்டியில் இயக்கினார் என்றும் கதைகள் பரவின.
நான் 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எனது கணவர் காணாமல் ஆக்கப்பட்டதை குறித்து புகார் செய்தேன். அற்காக 50,000 பணமும் மரணச் சான்றிதழும் பின்னர் மாதா மாதம் 500 ருபாயும் வழங்கப்பட்டது. 2001 ஆம் ஆண்டு மாத கொடுப்பனவு நிறுத்தப்பட்டது. எனது கணவரின் காணாமல் ஆக்கப்படுதல் எனது குழந்தைகளின் கல்வியை பாதித்தது.
எனது கணவர் பிழை செய்திருந்தாலும் தண்டனையாக காணாமல் ஆக்கப்படல் செய்யப்படலாமா? அரசு இந்த காணாமல் ஆக்கப்படுதலுக்கு முழு பொறுப்பு எடுக்க வேண்டும்.

வாக்குமூலம் எல்சி வெலிக்கும்பர கிரம்பே கெதர சமரசிங்கவின் மனைவி.

ஜமால்தீன் திலான்

விடுபட்ட தேதி 17/09/2008
இடம் காணவில்லை முபாரக் அன்வர் அலியின் தெஹிவளை வீட்டிலிருந்து

நான் ஜெனிபர் வீரசிங்க. இஸ்லாம் மதத்தை பின்பற்றும் மலே இனத்தை சேர்ந்த பெண்.எனது கணவர் இராணுவத்தில் சேவையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.அவர் பௌத்த மதத்தை சேர்ந்தவர்.நாங்கள் இருவரும் கலந்துரையாடி வீட்டில் இரண்டு மதங்களையும் பின்பற்றினோம். அதனால் எங்களின் மகனுக்கு ஜமால்தீன் டிலான் என்று பெயர் சூட்டினோம். மகனின் பெயரில் ஆரம்ப பெயர் என்னுடையது. மற்றையது என் கணவருடையது.

எனது பெரிய வீட்டில் வசிக்க மகன் அதிகம் விருப்பம் கொண்டதால் அவர் முஸ்லிம் மதத்தை பின்பற்றினார்.மருதானையில் உள்ள அந்த வீட்டில் இருந்தவாறே அவர் கல்வி கற்று தனியார் நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்தார். மகள் சிறிய வயதில் இருந்து குருநாகலையில் உள்ள எங்கள் வீட்டில் இருந்தார்.பௌத்த மதத்தை ஆழமாக கற்றார்.

'மகன் நேற்று அவரது நண்பர்களுடன் பயணம் சென்றார்.ஆனால் இதுவரை வீடு திரும்பவில்லை'என 2008.09.17 ஆம் திகதி எனது பெரிய வீட்டில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.அந்த நாட்களில் வெள்ளை வேனில் பிள்ளைகள் கொண்டு செல்லும் சம்பவம் இருப்பதால் சற்று வந்து பார்த்துச் செல்லுமாறு எனது வீட்டார் குறிப்பிட்டார்கள்.

மகனை அழைத்துச் செல்ல வந்தவர்கள் தொலைபேசி இலக்கத்துடன் குறிப்பு ஒன்றை விட்டுச் சென்றுள்ளார்கள்.கதைத்த போது மேலும் நான்கு நண்பர்களுடன் பயணம் செல்வதாக குறிப்பிட்டார்கள் .மகன் கதைக்கவில்லை.மூன்று நாட்கள் கடந்தும் மகன் வராத காரணத்தால் மகனின் நண்பர்களின் வீட்டுக்குச் சென்று ஆராய்ந்து பார்க்க நானும் எனது கணவரும் புறப்பட்டோம்.நாகானந்த என்பவர் மகனின் நண்பராக இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் யாருடனும் கதைக்க வேண்டியதில்லை.தனது மகனை தேடிக் கொள்வதாக நாகானந்தவின் தாயார் குறிப்பிட்டார்.நானும் எனது கணவரும் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடளித்தோம்.மகனின் ஏனைய நண்பர்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் குறிப்பிடும் விடயங்கள் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

மகனின் நண்பர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொழில்புரியும் இடங்கள், தெரிந்தவர்களின் விபரம் உள்ளிட்ட பல விடயங்களை நானும் எனது கணவரும் பொலிஸாரிடம் குறிப்பிட்டோம். தேடிப்பார்க்கிறோம், ஆராய்ந்து பார்க்கிறோம் என்றார்கள்.ஆனால் புதிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் சி.ஐ.டி யில் முறைப்பாடளித்தோம்.ஒருசில தகவல்களை தேடிக்கொடுத்தும் பொலிஸார் எமக்கு உதவவில்லை.ஒருவருடத்துக்கு பின்னர் 'முபாரக் பிள்ளைகளை கொண்டு சென்ற குழுவின் உளவாளி என்றும் கடற்படையின் லெப்டினல் கமான்டர் சம்பத் முனசிங்க இந்த சம்பவத்தில் பின்னணியில் இருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவத்துடனான சகல விடயங்களையும் நான் பொறுப்பான தரப்பினருக்கு தெரியப்படுத்தினேன்.அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு எழுத்து மூலமாக அறிவித்தேன்.சந்திப்பதற்கு வாய்ப்பு கோரினேன்.இருப்பினும் மகிழ்ச்சியான பதில் கிடைக்கவில்லை.

பிறிதொரு தாயுடன் ஒன்றிணைந்து வழக்கு தாக்கல் செய்தேன்.13 ஆண்டுகளாக இந்த வழக்கு தொடர்கிறது.இந்த வழக்கில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டார்.நாங்கள் எங்களின் மனதை திடப்படுத்திக் கொண்டு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறோம்.

சஞ்சீவா தீபால்

விடுபட்ட தேதி 18/12/1989
இடம் காணவில்லை வெயங்கொட வீட்டில்

நாங்கள் சஞ்ஜீவ தீபாலின் தாய் தந்தையர். நாம் கம்பஹா வெயங்கொட பகுதியில் இருந்தோம். எமக்கு இரண்டு மகன்மாரும் இரண்டு மகள்மாரும் இருந்தார்கள். 1971.10.10 ஆம் திகதி மூத்த மகன் பிறந்தார். அவர் நன்றாக கல்வி கற்றார். சாதாரண தர பரீட்சை எழுதிய பின்னர் பரீட்சை முடிவு வரும்வரை சும்மா இருக்க முடியாது என்று தந்தையுடன் மீரிகம வேலைத்தளத்துக்கு சென்றார். தந்தையுடனேயே போய் வந்தார். நண்பர்களுடன் பழகவில்லை. 1989.12.18 ஆம் திகதி இரவு 11 மணியளவில் பொலீஸ் மற்றும் இராணுவத்தினர் வந்து வாக்குமூலம் பெறுவதற்காக கம்பஹா பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என சொன்னார்கள். மகனை கொண்டுசெல்ல விடமாட்டோம் என்று நாம் இருவரும் கூச்சலிட்டோம். கத்த வேண்டாம் வாக்குமூலம் எடுத்துவிட்டு காலையில் அழைத்து வருவோம் என அப்போது சொன்னார்கள். தந்தை வரத்தேவையில்லை என சொன்னார்கள். ஆனால் மகன் இதுவரை வீட்டுக்கு திரும்பிவரவில்லை. திரும்பிவரவில்லை என்பதனால் மறுநாள் கம்பஹா பொலீஸ் நிலையத்துக்கு சென்ற போது அங்கே கொண்டு வரவில்லை என சொன்னதனால் வெயாங்கொட, நிட்டம்புவ பொலீஸ் நிலையங்களுக்கும் சென்றோம். அதனிடையே 1989.10.29 பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தோம். ஆனாலும் மகன் இருக்கவில்லை. பொலீஸ் நிலையங்களில் இல்லை என்பதனால் தெரிந்தவர்களை கண்டுபிடித்து இராணுவ முகாம்களுக்கும் சென்றோம். கொக்கல முகாம், மகியங்கனை கெமுணுபுர முகாம், பொலநறுவை முகாம் மின்னேரியா முகாம் ஆகியவற்றுக்கு சென்றோம். அந்த இடங்களுக்கு மகனின் அம்மாவை அழைத்துச் செல்லவில்லை. சில இடங்களில் கதைத்து விபரங்களை கேட்ட போதிலும், சில இடங்களில் எனக்கு பெரும் சங்கடங்கள் ஏற்பட்டன. இவற்றை தாயிடம் சொல்லவில்லை. நான் சென்ற அனைத்து இடங்களிலும் மகனின் வயது பிள்ளைகள் இருந்த போதிலும், எனது மகன் இருக்கவில்லை. சில முகாம்களில் இருப்போரின் பெயர் பட்டியலை பார்ப்பதற்கு வழங்கினார்கள்.
அதன் பின்னர் மகன் காணாமல் போனமை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களில் முறைப்பாடு செய்தோம். 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினர் எம்மை அழைத்து விபரங்களைக் கேட்டார்கள். காணாமல் போனோர் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து பார்க்குமாறு சந்திரிக்கா அம்மையார் சொன்னார். மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்தோம். 2019 ஆண்டில் இடைக்கால கொடுப்பனவு என்ற வகையில் இறந்த ஒருவருக்கு ரூ. 6000 வரவுசெலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டதாக அறியக் கிடைத்தது. இருந்த போதிலும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. 1994 ஆண்டில் மரணச் சான்றிதழுடன் ரூ. 15,000 இழப்பீடு கிடைத்தது. எமது மகனின் பெறுமதி ரூ. 15,000 தானா?
மகன் காணாமல் போகும் போது 21 வயதுகூட இல்லை. மகன் இறந்துவிட்டார் என்று எனது மனைவி அதாவது தீபாலின் தாயார் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. எங்காவது இருப்பார். எமது மகன் எந்தவொரு தவறும் செய்யாதவர். எமது முன்னேற்றத்தில் பொறாமைப்பட்டு அயலவர்கள் செய்த பழிவாங்கல். மூத்த மகன் வருவார் என்ற எதிர்பார்ப்புடன் இளைய மகனின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறோம்.

சந்திம தேரர் (சமிந்த சிறீநாத் வீரசிங்க)

விடுபட்ட தேதி 19/11/1989
இடம் காணவில்லை பன்வில வீட்டிலிருந்து

ஜானக சமன் குமார மற்றும் சந்திம தேரர் (சமிந்த சிறீநாத் வீரசிங்க) எனக்கு இரண்டு மகன்மார் இருந்தனர்: ஜானக சமன் குமார எனது மூத்த மகன், சமிந்த சிறிநாத் வீரசிங்க எனது இளைய மகன். எனது இளைய மகனான சமிந்த ஒரு துறவியாகத் திருநிலைப்படுத்தப்பட்டு சமிந்த தேரர் என அழைக்கப்பட்டார். எனது இரண்டு மகன்மாரும் 18 வயதும் 17 வயதும் நிறைந்தவர்களாக இருந்த போது எமது பன்வில வீட்டில் இருந்து கடத்தப்பட்டனர்.
1989 நவம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் சுமார் 11 மணியளவில் பொலிசார் எனக் கூறிக்கொண்டு இரண்டு பேர் எமது வீட்டுக் கதவைத் தட்டினர். நான் கதவைத் திறந்த போது வெளியில் ஒரு கும்பல் நிற்பதைக் கண்டேன். அவர்கள் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து எனது இரண்டு மகன்மாரையும் பற்றியிழுத்து ஒரு வாகனத்தில் கூட்டிச் சென்றனர். அவர்கள் எம்மை வெளியில் வர அனுமதிக்கவில்லை.
சில நிமிடங்களின் பின்னர், தொடராகச் துப்பாக்கி வெடிச் சத்தங்களை நான் கேட்டேன். அவர்கள் எனது மகன்மாரைச் சுட்டுவிட்டனரோ என நான் பயந்தேன். ஆனால் எனது மகன்மாரை அவர்கள் எமது அயலவர் ஒருவரின் வீட்டின் முன் மண்டியிடச் செய்து அவர்களின் நண்பர்களின் பெயர்களைக் கூறுமாறு கூறியதாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். அன்றிரவு, எமது கிராமத்தில் இருந்து இன்னும் 5 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இவ்வாறு கடத்தப்பட்ட ஏழு பேரில் இருவர் சில காலங்களின் பின்னர் திரும்பிவிட்டனர்.
கடத்தல் நிகழ்ந்து பத்து நாட்களின் பின்னர், தலையில்லாத முண்டமொன்று எமது கடையின் முன் போடப்பட்டிருந்தது. அந்த நபர் ஏழே நாட்களான ஒரு பெண் சிசுவின் தந்தையாவார். எனது பிரதேசத்தினைச் சேர்ந்த பலரும் இவ்வாறு கோரமாகக் கொல்லப்பட்டனர். இது ஜேவிபியின் வேலை என்று சிலர் குறிப்பிட்டனர்.
நான் பன்வில பொலிசுக்கும் பல இராணுவ முகாம்களுக்கும் சென்றேன். ஆனால் ஒரு போதும் எனக்கு எத்தகவல்களும் கிடைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டுதான் பொலிசார் எனது முறைப்பாடுகளைப் பதிவுசெய்தனர்.
ஜானக கடத்தப்படுவதற்கு முன்னர், அவர் பஸ் நடத்துனர் ஒருவருடன் வாக்குவாதப்பட்டார் என்றும் அந்த நடத்துனர் ஜானகவைப் பார்த்து ஜானக மூன்று நாட்கள்தான் உயிரோடு இருப்பான் என அச்சுறுத்தினார் என்றும் நான் கேள்விப்பட்டேன்.
இந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்குவதற்கு ஜேவிபியே இதனைச் செய்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன் ஏனெனில் அந்நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன. எனது இரண்டு மகன்மாருடன் சேர்த்து எமது கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளை ஒரு ஜீப்பில் யாரால் அழைத்துச் சென்றிருக்க முடியும்? பொலிசா அல்லது இராணுவமா?
எனது மகன்மார்கள் இறந்துவிட்டனரா அல்லது உயிரோடு உள்ளனரா என்பது எனக்கு இன்னும் நிச்சயமாகத் தெரியாது. அரசாங்கம் எனக்கு 30,000 ரூபா வழங்கி இரண்டு மகன்களுக்காகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கியது. நான் அந்தப் பணத்தினை ஒரு துறவிக்கு நன்கொடையாக வழங்கினேன்.
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறியாது நாம் இந்த நாட்டில் வாழத்தான் வேண்டுமா?
அசோக வீரசிங்கவின் வாக்குமூலம், ஜானக சமன் குமாரவினதும் சமிந்த தேரரினதும் தாய்.

ஜானக சமன் குமார மற்றும்

விடுபட்ட தேதி 19/11/1989
இடம் காணவில்லை பன்வில வீட்டிலிருந்து

ஜானக சமன் குமார மற்றும் சந்திம தேரர் (சமிந்த சிறீநாத் வீரசிங்க) எனக்கு இரண்டு மகன்மார் இருந்தனர்: ஜானக சமன் குமார எனது மூத்த மகன், சமிந்த சிறிநாத் வீரசிங்க எனது இளைய மகன். எனது இளைய மகனான சமிந்த ஒரு துறவியாகத் திருநிலைப்படுத்தப்பட்டு சமிந்த தேரர் என அழைக்கப்பட்டார். எனது இரண்டு மகன்மாரும் 18 வயதும் 17 வயதும் நிறைந்தவர்களாக இருந்த போது எமது பன்வில வீட்டில் இருந்து கடத்தப்பட்டனர்.
1989 நவம்பர் 19 ஆம் திகதி பிற்பகல் சுமார் 11 மணியளவில் பொலிசார் எனக் கூறிக்கொண்டு இரண்டு பேர் எமது வீட்டுக் கதவைத் தட்டினர். நான் கதவைத் திறந்த போது வெளியில் ஒரு கும்பல் நிற்பதைக் கண்டேன். அவர்கள் வீட்டினுள் பலவந்தமாக நுழைந்து எனது இரண்டு மகன்மாரையும் பற்றியிழுத்து ஒரு வாகனத்தில் கூட்டிச் சென்றனர். அவர்கள் எம்மை வெளியில் வர அனுமதிக்கவில்லை.
சில நிமிடங்களின் பின்னர், தொடராகச் துப்பாக்கி வெடிச் சத்தங்களை நான் கேட்டேன். அவர்கள் எனது மகன்மாரைச் சுட்டுவிட்டனரோ என நான் பயந்தேன். ஆனால் எனது மகன்மாரை அவர்கள் எமது அயலவர் ஒருவரின் வீட்டின் முன் மண்டியிடச் செய்து அவர்களின் நண்பர்களின் பெயர்களைக் கூறுமாறு கூறியதாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். அன்றிரவு, எமது கிராமத்தில் இருந்து இன்னும் 5 பேரை அவர்கள் கடத்திச் சென்றனர். இவ்வாறு கடத்தப்பட்ட ஏழு பேரில் இருவர் சில காலங்களின் பின்னர் திரும்பிவிட்டனர்.
கடத்தல் நிகழ்ந்து பத்து நாட்களின் பின்னர், தலையில்லாத முண்டமொன்று எமது கடையின் முன் போடப்பட்டிருந்தது. அந்த நபர் ஏழே நாட்களான ஒரு பெண் சிசுவின் தந்தையாவார். எனது பிரதேசத்தினைச் சேர்ந்த பலரும் இவ்வாறு கோரமாகக் கொல்லப்பட்டனர். இது ஜேவிபியின் வேலை என்று சிலர் குறிப்பிட்டனர்.
நான் பன்வில பொலிசுக்கும் பல இராணுவ முகாம்களுக்கும் சென்றேன். ஆனால் ஒரு போதும் எனக்கு எத்தகவல்களும் கிடைக்கவில்லை. 1990 ஆம் ஆண்டுதான் பொலிசார் எனது முறைப்பாடுகளைப் பதிவுசெய்தனர்.
ஜானக கடத்தப்படுவதற்கு முன்னர், அவர் பஸ் நடத்துனர் ஒருவருடன் வாக்குவாதப்பட்டார் என்றும் அந்த நடத்துனர் ஜானகவைப் பார்த்து ஜானக மூன்று நாட்கள்தான் உயிரோடு இருப்பான் என அச்சுறுத்தினார் என்றும் நான் கேள்விப்பட்டேன்.
இந்தச் சம்பவத்திற்குப் பழிவாங்குவதற்கு ஜேவிபியே இதனைச் செய்திருக்க வேண்டும் என நான் நினைத்தேன் ஏனெனில் அந்நாட்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றன. எனது இரண்டு மகன்மாருடன் சேர்த்து எமது கிராமத்தைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளை ஒரு ஜீப்பில் யாரால் அழைத்துச் சென்றிருக்க முடியும்? பொலிசா அல்லது இராணுவமா?
எனது மகன்மார்கள் இறந்துவிட்டனரா அல்லது உயிரோடு உள்ளனரா என்பது எனக்கு இன்னும் நிச்சயமாகத் தெரியாது. அரசாங்கம் எனக்கு 30,000 ரூபா வழங்கி இரண்டு மகன்களுக்காகவும் இறப்புச் சான்றிதழ் வழங்கியது. நான் அந்தப் பணத்தினை ஒரு துறவிக்கு நன்கொடையாக வழங்கினேன்.
எனது இரண்டு பிள்ளைகளுக்கும் என்ன நடந்தது என்பதை அறியாது நாம் இந்த நாட்டில் வாழத்தான் வேண்டுமா?
அசோக வீரசிங்கவின் வாக்குமூலம், ஜானக சமன் குமாரவினதும் சமிந்த தேரரினதும் தாய்.

சுனில் பெரேரா

விடுபட்ட தேதி 14/08/1989
இடம் காணவில்லை பமுனுவ , மஹரகம

ஜெயமண்ணா

விடுபட்ட தேதி 19/08/1989
இடம் காணவில்லை கஹந்தோட்ட மாலபே வீட்டிலிருந்து

வசந்த காமினி அபயவிக்றம

விடுபட்ட தேதி 19/09/1989
இடம் காணவில்லை வாவின்ன வீட்டிலிருந்து

எனது மகன் காமினி ஒரு மெக்கானிக்காக இருந்தார். அவர் காணாமல் போன போது 22 வயது.
1989.09.19 இரவு 11.30 மணியளவில் இரு இராணுவ ஜீப் வண்டிகள் எமது வாவின்ன வீட்டுக்கு வந்தது. பத்து நபர்கள் இராணுவ சீருடையில் ஜீப்பிலிருந்து குதித்து வந்து காமினியின் பெயரை சொல்லி எமது கதவை தட்டினர். நான் மிகவும் பயந்து போனேன். ஆனால் நாம் கதவை திறக்கா விட்டால் அவர்கள் எமது கதவை உடைக்க போவதாக அச்சுறுத்தினர். நான் கதவை திறந்த போது வேகமாக உள் நுழைந்தோர் துப்பாக்கியை எம் முன் நீட்டி அசையாது இருக்க கூறினர். நான்; சத்தமிட்ட போது அமைதியாக இருக்குமாறு கூறினர். நான் பயத்தின் காரணமாக மயங்கி விழுந்தேன்.
அவர்கள் அந்த நேரம் உறங்கி கொண்டு இருந்த காமினியை தேடி வீட்டை சோதனை செய்தனர். அவர்கள் அவன் அறையுள் நுழைந்து வெளியில் இழுத்து வந்து அவனை வெளியில் நின்ற ஜீப்பினுள் பலவந்தபடுத்தி ஏற்றினர். . நான் மயக்கம் தெளிந்து காமினியின் அறையினுள் சென்ற போது அவனுடன் அவனது பெட் ஷீட்டும் பாதணியும் (சாண்டல்) காணாமல் போய் இருந்தது. அவர்கள் அவனின் முகத்தை மறைக்க பெட் ஷீட்டை எடுத்து சென்று இருக்கலாம்.
மறு நாள் காலை பல இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்த மடுல்கலை முகாமுக்கு சென்றேன். ஒரு இராணுவ அதிகாரி கூறினார் காமினி என அழைக்கப்படும் யாரும் இங்கு இல்லை என. ஆனால் அருகில் இருந்த தேயிலை தோட்டத்தை சேர்ந்தவர் காமினியை முகாமின் பின் புறத்தில் கண்டதாக கூறினார். நான் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற போது அவர்கள் முறைப்பாட்டை எடுக்க மறுத்து விட்டனர். ஆனால் நான் தொடர்ந்து மாத்தளை, பள்ளேக்கல, பூசா முகாம்களில் எனது மகனை தேடினேன்.
பஸ்ஸில் எனக்கு காமினிப் பற்றி கூறிய நபரை சந்திக்க நேரிட்டது. இதன்போது காமினியை தவறாக அழைத்து சென்ற சிப்பாய்களின் உரையாடலை கேட்டுள்ளார். மடுல்கலை தபாற் கந்தோரில் வேலை செய்த காமினி யைத் தேடிச் சென்ற போது அங்கிருந்த ஒருவர் தவறுதலாக என்னுடைய மகனை அடையாளம் காட்டியுள்ளதாகவும் பஸ்ஸில் வந்த நபர் தெரிவித்தார். இது பிழையான நபர் என்று தெரிந்தும் அவர்கள் எனது மகனை விடுதலை செய்து சரி செய்யவில்லை. மாறாக எனது மகனை காணாமல் ஆக்கி உள்ளனர். இறுதியாக தபாற் கந்தோரில் பணி புரிந்த நபரை கண்டு பிடித்து அவரையும் கொலை செய்துள்ளனர்.
நான் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எனது மகன் காணாமல் போனதை முறைப்பாடு செய்தேன். 1996ஆம் ஆண்டு தான் பொலிஸ் முறைப்பாடு செய்ய முடிந்தது. ஆனால் எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. நான் 25,000ரூபாய் நஷ்ட ஈடாக பெற்றுக் கொண்டேன். எனது மகன் உயிருடன் இருந்தால் இதை விட மேலாக உழைத்து இருப்பான்.
எனது மகன் இன்றி எதுவும் இல்லை எனக்கு. தனியாக வாழும் எனக்கு என் எதிர்காலம் ஓர் கேள்விக்குறி. அரசாங்கம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும்.

வாக்குமூலம் - எச்.ஜீ. யோகாமினி- வசந்த காமினி அபயவிக்ரமவின் தாய்

டபிள்யு. பி. ரஞ்சித் விஜேரத்ன மற்றும் டபிள்யு. பி. லலித் விஜேரத்ன

விடுபட்ட தேதி 12/12/1989
இடம் காணவில்லை கொழும்பு பொலிஸ் நிலையமொன்றிலிருந்து

நாம் ஜேவிபி என முத்திரை குத்தப்பட்டோம். மக்கள் எம்மைத் தவிர்க்க முயற்சித்தனர்.
டபிள்யு. பி பியசேன ஆகிய நான் மூன்று பிள்ளைகளின் தாய். எனது இரண்டாவது மகனான லலித் அப்போது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்தார். ரஞ்சித் எனது இளைய மகன், அவர் அப்போது திருமணமாகி அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். அவர் ஆடைத் தொழிற்சாலையொன்றில் வேலை செய்தார். ஆனால் இன்று, எனது மூத்த மகன் மட்டுமே என்னுடன் இருக்கின்றார். எமது இளைய மகன்மார் இருவரும் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டனர்.
லலித் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஜேவிபியுடன் இணைந்திருந்த சமவுடைமை மாணவர் சங்கத்தின் தலைவராக இருந்தார். இதனால் லலித்தைத் தேடிப் பொலிசார் எமது வீட்டுக்குப் பல தடவைகள் வந்தனர். பொலிசார் எமது வீட்டுக்கு வரத் தொடங்கிய பின்னர் லலித் ஒருபோதுமே வீட்டுக்கு வரவில்லை.
1989 டிசம்பர் 10 ஆம் திகதி நாம் எமது உறவினரின் வீட்டில் இருந்த வேளை அங்கே பொலிசார் அதிரடியாக நுழைந்து லலித்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினர். லலித்தை ஒப்படைக்குமாறு கூறி எனது கணவரை வெள்ளை வேனில் அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்களின் பின்னர் இளைய மகனான ரஞ்சித்தும் பொலிசாரால் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்டார். எனது கணவர் தடுத்துவைக்கப்பட்டிருந்த கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கே அவர்கள் ரஞ்சித்தையும் அழைத்துச் சென்றனர். எனது கணவரும் ரஞ்சித்தும் வெவ்வேறு அறைகளில் வைக்கப்பட்டனர். அச்சந்தர்ப்பத்தில் ரஞ்சித்தின் வயது 28.
காணாமல் போனபோது எனது இரண்டாவது மகன் லலிதிற்கு அப்போது 30 வயது. பொலிசார் வரத் தொடங்கிய பின்னர் லலித் வீட்டுக்கு வரவேயில்லை. அவருக்கு என்ன நடந்தது என்று எமக்கு இன்னும் தெரியாது.
1990 ஜனவரி 2 ஆம் திகதி எனது கணவர் பொலிஸ் கட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் ரஞ்சித் விடுவிக்கப்படவில்லை. எனது கணவர் பல தடவைகள் பொலிசுக்குச் சென்று எனது மகன் ரஞ்சித்தைப் பற்றி விசாரித்தார். அவ்வாறு விசாரித்த ஒவ்வொரு தடவையும், விசாரணை முடிந்த பின்னர் எனது மகனை வீட்டுக்கு அனுப்புவதாகவே பொலிசார் எனது கணவருக்கு வாக்குறுதியளித்தனர். ஆனால் ரஞ்சித் ஒருபோதுமே திரும்பி வரவில்லை.
எமது இரண்டு மகன்மாருக்கும் என்ன நடந்தது என இன்று வரை எமக்குத் தெரியாது. அவர்கள் கொல்லப்பட்டிருந்தால், ஏன் கொல்லப்பட்டனர்? யாரால்? என்ன காரணத்திற்காகக் கொல்லப்பட்டனர். இவற்றுக்கெல்லாம் யாருமே பதிலளிக்கவில்லை.
1996 ஆம் ஆண்டு, ஜனாதிபதி ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அவர்கள் எமது இரண்டு மகன்மாருக்கும் இறப்புச் சான்றிதழ்களை வழங்கி இருவருக்கும் நட்டஈடாகத் தலா 25,000 ரூபா தந்தனர். சில காலத்தின் பின்னர், பல மாதங்களாக எனக்கு மாதாந்தம் 500 ரூபா வழங்கினார்கள். 2001 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அக்கொடுப்பனவு நிறுத்தப்பட்டது.
ரஞ்சித் காணாமல் போனமை தொடர்பாக ஒரு நீதிமன்ற வழக்கு இருந்த போதும் அதனால் எந்த முடிவும் கிடைக்கவில்லை. ரஞ்சித்தின் இரண்டு பிள்ளைகளும் அவர்களின் தந்தை இல்லாத காரணத்தினால் அவர்களுடன் தாயுடன் சேர்ந்து மிகுந்த இன்னல்களுக்கு முகங்கொடுத்தனர்.

குசும்சிறி த சில்வா

விடுபட்ட தேதி 11/11/1989
இடம் காணவில்லை ஜா- எல வீட்டிலிருந்து

எனது கணவரை கடத்திய நபர்களை எனக்கு தெரியும்.
நான் உயர் தரம் கற்ற பின்னர் வேலை செய்வதற்காகக் கட்டுநாயக்கவிலுள்ள சுதந்திர வர்த்தக வலயத்திற்குச் சென்றேன். அங்கே நான் குசும்சிறி டி சில்வாவைச் சந்தித்தேன். 1987 செப்டெம்பரில் நாம் திருமணம் செய்துகொண்டோம். ஒரு வருடத்தின் பின்னர் எமக்கு ஒரு மகன் பிறந்தான். 1989 நவம்பர் 11 ஆம் திகதி அவர்கள் குசும்சிறியை எம்மிடமிருந்து பிரித்த போது எமக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் கடந்திருந்தது.
இரவு 12 மணிக்கும் 1 மணிக்கும் இடையில் பொலிஸார் சிலர் வந்து எமது கதவைத் திறக்குமாறு எம்மை கட்டாயப்படுத்தினர்.
பொலிஸிக்குப் பயந்து குசும்சிறி கட்டிலின் அடியில் ஒளித்திருந்த போது குசும்சிறியின் தம்பியை அவர்கள் எனது கணவர் எனத் தவறாக அடையாளப்படுத்திக் கூட்டிச் சென்றனர்.
சுமார் 2 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் சில பொலிஸார் வந்து வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்த அவர்கள் குசும்சிறியைப் பிடித்து அவர் அணிந்திருந்த சாரத்தின் துண்டொன்றை கிழித்து அவரின் கண்களைக் கட்டி எமது எதிர்ப்பினையும் மீறி தாண்டி அவரை அழைத்துச் சென்றனர்.
அடுத்த நாள் காலையில் குசும்சிறியின் தந்தை குசும்சிறியின் சகோதரியுடன் சென்று ஜா-எல பொலிசில் முறைப்பாடு செய்தார். குசும்சிறியைக் கடத்துவதற்கு வந்த சில பொலிஸ் அதிகாரிகளை அவர்கள் அடையாளம் கண்ட போதிலும் அச்சத்தின் காரணமாக முறைப்பாட்டில் அவர்களின் பெயர்களை அவர்கள் குறிப்பிடவில்லை. குசும்சிறியின் தந்தை குசும்சிறியின் சகோதரியின் உதவியுடன் ஜா-எல பொலிஸ் நிலையத்தில் ஒரு சிற்றுண்டிச் சாலையினை நடத்தி வந்த காரணத்தினால் எமது வீட்டுக்கு வந்த சில பொலிஸ் அதிகாரிகளை அவர்கள் மிகத் தெளிவாக அடையாளம் கண்டனர். உப பொலிஸ் பரிசோதகர் கிளெமென்ட் பெர்ணாண்டோவின் தலைமையிலேயே பொலிஸ் குழுவினர் வந்திருந்தனர்.
சில நாட்களின் பின்னர்இ குசும்சிறியின் தம்பியும் அன்றைய தினம் கடத்தப்பட்ட ஏனைய மூன்று பேரும் வீடு திரும்பினர். உள்ளாடைகள் மாத்திரமே அணிந்த நிலையில் தாம் விளக்குக் கம்பத்தில் கட்டப்பட்டிருந்ததாகவும் பின்பு கட்டவிழ்க்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். குசும்சிறி கடத்தப்படுவதற்கு முன்னர் நான் பமுனுகமவில் உள்ள எனது வீட்டில் இருந்த போது எனது பெற்றோரின் வீட்டுக்கு அருகில் இருந்த எனது மாமாவின் வீட்டுக்குத் தீ வைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அப்போது வீட்டில் யாரும் இருக்கவில்லை. அடுத்த நாள் நானும் எனது தந்தையும் தாயும் பமுனுகம பொலிசாரால் அப்போது பயன்படுத்தப்பட்டு வந்த அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு எமது வாக்குமூலம் பெறப்பட்டுப் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டோம். எமது மாமாவுக்கு எதிராக கிராம மக்களால் ஒப்பமிடப்பட்ட மனுவினை அவர்கள் அங்கேவைத்து எம்மிடம் காட்டினார்கள்.
குசும்சிறியைப் பற்றி ஏதாவது செய்தியைப் பெற்றுக்கொள்ள நாம் சகல முயற்சிகளையும் மேற்கொண்டோம். ஆனால் அனைத்துமே வீணாகிவிட்டன.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின் பின்னர் எனக்கு 50,000 ரூபா பணமும் மரண சான்றிதழும் வழங்கப்பட்டது.

வாக்குமூலம்: குசும்சிறி டி சி;ல்வாவின் மனைவி திவாசிறி கொடிகாவத்த.

யு.பி. விமலநாத

விடுபட்ட தேதி 15/12/1989
இடம் காணவில்லை மீரிகம, பொருக்கமுவ வீட்டிலிருந்து

எனது தந்தையின் பெயர் யு.பி. விமலநாத. நாங்கள் அழகான குடும்பம். நான், அப்பா, அம்மா, தங்கை எல்லோரும் சந்தோசமாக வாழ்ந்து வந்தோம். ஆனால் பின்னைய நாட்களில் பொருளாதார சிக்கல் காரணமாக அம்மா வெளிநாட்டுக்கு சென்றார் குடும்பத்தைப் பராமரிப்பதற்காக எமது அம்மா அனுப்பும் பணத்தை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தியது எனக்கு நினைவில் உள்ளது. அவர் எந்த விதத்திலும் எமக்கு குறைவைக்கவில்லை. அம்மா அனுப்பும் பணத்துக்கு மேலதிகமாக அப்பா கடை ஒன்றை நடத்தி வந்தார். அதன் மூலமும் வருமானம் எமக்கு கிடைத்து வந்தது. அம்மா அருகில் இல்லாவிட்டாலும் அப்பா எம்மை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார்.
நாங்கள் அனைவரும் 1989.12.15ஆம் திகதி இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது திடீரென கதவைத் தட்டும் சத்தம் கேட்டவுடன் அப்பா எழுந்து சென்று கதவைத் திறந்தார். அப்பா கதவைத் திறந்தவுடன் இராணுவத்தினர் வீட்டுக்குள் நுழைந்தனர். அப்போது 6,7 பேர் இருந்தனர். அவர்கள் அப்பாவிடம் பெயரைக் கேட்டனர். என்ன செய்கிறீர்கள் என்றும் கேட்டனர். அவர்களின் அத்தனை கேள்விகளுக்கும் அப்பா உண்மையைக் கூறினாலும் அவர்கள் எங்கள் அப்பாவை வெளியே கூட்டிச் சென்றனர். அதுமட்டுமல்லாமல் வீட்டில் எங்களுடன் தங்கியிருந்த உறவு முறை அண்ணா ஒருவரையும் கூட்டிச் சென்றனர். நாங்கள் நன்றாக பயந்துவிட்டோம். நான் அழுதபோது அங்கிருந்த ஒருவர் அழுகவேண்டாம் அப்பாவை விரைவில் அனுப்பிவிடுவோம் என கூறி அப்பாவையும் அண்ணாவையும் கூட்டிக்கொண்டு சென்றனர். நானும் தங்கையும் அவர்கள் பின்னாடியே சென்றோம்.அங்கே பெரிய இராணுவ லொறிகள் சிலவற்றை நிறுத்தியிருந்தனர். அதனருகே செல்லும் போதே ஒருவர் அவர்களின் கண்களை கட்டுமாறு கூறினார். அதன்பிறகு அவர்கள் எங்கள் அப்பாவை அழைத்துச் சென்றனர்.
அம்மாவும் அருகில் இல்லாத நாங்கள் பாட்டியின் துணையுடனேயே இருந்தோம். அப்பா காணாமல் போன போது எனது அம்மாவும் குவைட்டில் பல பிரச்சினைகளை சந்தித்தார். அம்மாவுக்கு பணம் அனுப்ப முடியாமல் போனது. அதனால் நாம் மிகவும் கஸ்டப்பட்டோம்.எப்படியாவது அம்மா இலங்கைக்கு வந்த பிறகு அப்பாவைத் தேடி மிகவும் கஸ்டப்பட்டார்.மீரிகம இராணுவ முகாமுக்கும் அப்பாவைத் தேடிச் சென்றார். அனுராதபுரம், காலி, மாத்தறை, கொழும்பு உள்ளிட்ட அனைத்து இராணுவ முகாம்களுக்கும் சென்றார். ஆனால் அப்பாவைப் பற்றி எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.1996இல் எமக்கு 50,000 நட்டஈடு அப்பாவிற்காக கிடைத்தது. நட்டஈடு கிடைத்தாலும் அப்பா மாத்திரம் கிடைக்கவில்லை