September 9, 2025

இலங்கை ஊடகவியலாளர்கள் படுகொலை: நிமலராஜன் மயில்வாகனம் சம்பவம்.

Share

நிமலராஜன் மயில்வாகனம்,
அச்சமில்லாத ஊடகவியலாளர்.
யுத்தத்தால் சேதமடைந்த யாழ்ப்பாண தீபகற்பத்தில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் நடந்து சென்று பிபிசி, தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இரண்டு தசாப்தங்களாக செய்தி அறிக்கையிடலில் ஈடுபட்டார்.
திகதி: 2000 அக்டோபர் 29.
இராணுவத்தினால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது, நிமலராஜன் அவரது வீட்டில் இருந்தார். வீடு அமைந்து இருந்தது அதி உச்ச பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த பிரதேசத்திலாகும். ஆனால் அன்று இரவு நிமலராஜன் அவரது வீட்டின் உள்ளே கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
2000 பாராளுமன்ற தேர்தல்:
இது வரலாற்றில் தேர்தல் வன்முறை, வாக்காளர்களை அச்சுறுத்தல் மற்றும் வாக்குகள் கொள்ளை அடித்தல் சுலபமாக இடம்பெற்ற தேர்தல் என்று
அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. இந்த சகல சட்ட விரோத செயல்களையும் நிமலராஜன் அச்சமின்றி அறிக்கையிட்டார். அதனால்தான் நிமலராஜன் எனும் இந்த பயமில்லாத ஊடகவியலாளர் பின்னால் படுகொலை விரட்டி வந்தது.
அவரது படுகொலை தொடர்பாக இன்றும் குற்றம் சாட்டப்படுவது வடக்கில் வன்முறை செயல்களுக்கு சம்பந்தமான பெயர் பெற்ற ஈபிடிபி கட்சியை ஆகும். அப்போது அந்தக் கட்சியின் தலைவராக செயல்பட்டவர் டக்லஸ் தேவானந்த. அவர் அப்போதைய அரசின் அமைச்சரவை அமைச்சர்.
ஊடகவியலாளர்களுக்கு தமது தொழில் சுதந்திரத்தைக் கூட இல்லாமல் செய்த யுகத்தில் அந்த சகல அச்சுறுத்தல் பயமுறுத்தல்களுக்கு மத்தியிலும் நிமலராஜன் தனது ஊடக அறிக்கை இடுதலை பிற்படுத்தவில்லை. தனது செய்திகளை உலகெங்கும் அனுப்புவதை கைவிடவில்லை. உண்மையிலேயே அவர் வடபகுதியில் இருந்து தனிக்கைகளை உடைத்தெரிந்து உலகத்திற்கு பேசும் தனிக் குரலான ஊடகவியலாளர்.
அவரது படுகொலை சம்பவம் தொடர்பாக முழு விபரமான அறிக்கையுடன் படுகொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டதற்கு உள்ளான இன்னும் 44 ஊடகவியலாளர்களின் ஆரம்ப தகவல்கள் உள்ளடங்கிய இந்த அறிக்கை 2025.09.08ம் திகதி காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியம் மூலம் இலங்கை மன்றக் கல்லூரியில் வெளியிடப்பட்டது. அங்கு அந்த ஊடகவியலாளர்கள் உட்பட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதற்கு உட்படுத்திய மற்றும் படுகொலை செய்த சகல அன்பானவர்களையும், இந்த சகல சம்பவங்களின் உண்மையை வெளிப்படுத்திக் கொள்வதற்கும் மற்றும் அவசரமாக நீதியை நிலைநாட்டிக் கொள்வதற்குமான அவசியத்தையும் பெறுமதியையும் பற்றி கலந்துரையாடல் சபையை நடாத்தினோம்.
இந்த அறிக்கையை தயாரிப்பதில் காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்துடன் REDRESS மற்றும் ITJP ஆகிய மனித உரிமைகள் அமைப்புகள் இரண்டும் சம பங்களிப்பு வழங்கின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *