சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சகோதரருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல்..
சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சகோதரருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல்..
இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது ஜூலை 22 ம் திகதி பெலவத்தயில் அமைந்துள்ள கட்சி காரியாலயத்திலாகும்.1987-93 காலப் பகுதியில் பாதுகாப்பு பிரிவினர் மூலம் நடாத்தப்பட்ட கடத்திச்செல்லல் மற்றும் தடுத்து வைத்திருந்த சந்தர்பங்களில்,
1) சித்திரவதைக்கு உள்ளானவர்களின் தகவல் உள்ளடக்கிய அரசின் உத்தியோகபூர்வ அட்டவணையை தயாரித்தல்.
2) பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுத்தல்.
3) அந்த காலம் பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட சகல சித்திரவதை முகாம்கள் பற்றிய விசாரணை நடாத்துதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறக் கூடியவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துதல்.
சித்திரவதைக்கு உள்ளானவர்களின் ஒன்றியத்தின் இந்த பிரதான கோரிக்கைகள் மூன்றையும் செயல்படுத்துவதற்காக தேசிய மக்கள் சக்தி அரசின் கவனத்தை செலுத்துவது தொடர்பாக இங்கு கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.