2010 ஜனவரி 24 ம் திகதி ஊடகவியளாலர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச்சென்று, கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக கொழும்பு விசேட
2010 ஜனவரி 24 ம் திகதி ஊடகவியளாலர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச்சென்று, கொலை செய்து, காணாமல் ஆக்கப்பட்டது தொடர்பாக கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றில் அதி குற்றச்சாட்டு தொடுக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 10 பேரிலுள்ள இராணுவத்தின் ஓய்வு பெற்ற பிரகேடியர் ஷம்மி குமாரரத்ன ஜுன் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அது அந்த வழக்கின் சாட்சியாளரான சுரேஷ் குமார எனபவருக்கு தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டிலாகும்.
இன்று (12) திருகோணமலை நீதவான் நீதிமன்றம் மூலம் ஷம்மி குமாரரத்ன இவ்வாறு விளக்கமறியலில் வைக்க கட்டளை இட்டதுடன் ஜுலை 10ம் திகதி அழைக்கப்படவுள்ள எக்னலிகொடவை காணாமல் ஆக்கப்பட்ட கொழும்பு விஷேட மூவரடங்கிய நீதிமன்றின் வழக்கிற்கு அவரை ஆஜர்படுத்துமாறு நீதவான் கட்டளை இட்டார்.