நல்ல பயணம்..!
காணாமல் ஆக்கப்பட்டதன் வேதனை காணாமல் போன அன்பானவருக்கு அல்ல, நீதி கிடைக்காமல் மரணிக்க நேர்ந்த தாய் தந்தையர்களுக்காகும்.
விதான கங்கானம்லாகே ஆரியதாஸ, மற்றுமொரு தந்தை அல்ல. வாழ்க்கையில் உயிருக்கு சமமான தனது உயிரையும் விட பெறுமதிமிக்க மகனின் தந்தையாவர். தன்னிடமிருந்து பறித்தெடுத்துச் சென்ற புதல்வனுக்கு நீதியை தேடிச் சென்ற ஆயிரக்கணக்கான தந்தைகளின் மத்தியில் நீதியை காணாத எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற கம்பஹ, மாகிலங்கமுவவை சேர்ந்த ஒரு தந்தை.
மகன், சுமித் பிரசன்ன. 1989 நவம்பர் 17, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டார்.
ஆரியதாஸ, தனது மகனுக்காக, அவ்வாறான நூற்றுக் கணக்கான புதல்வர்களின் நீதி தொடர்பாக நீண்ட காலமாக இருந்த காணாமல் போனாரின் குடும்ப ஒன்றியத்தின் தந்தை ஒருவர்.
விவசாயத்தை உணவாகக் கொண்டு வாழ்க்கை நடாத்திய தகப்பன் ஆரியதாஸ விவசாய சங்க செயற்பாட்டாலர் ஆவர்.
81 வருடங்கள், அதில் 35 வருடங்களாக மல்லுக்கட்டியது சுமித்தை காணாமல் ஆக்கப்பட்ட வேதனை மாதிரி நீதி தொடர்பாக நிச்சயமற்ற எதிர்பார்பிலாகும்.
தந்தையே..,
இன்று போல்
நாளையும் நீங்கள் இருப்பீர்கள்
போராட்டம் நடத்தும் இந்த
இதயத்தின் உள்ளே.
நல்ல பயணம்..!